சவூதி அரேபிய அரசு வேலைக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் ஒழுங்கீனமான சிகை அலங்காரம் மற்றும் முறையற்ற ஆடைகள் அணிந்திருந்தால் அவர்களின் விண்ணபங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு அரச அலுவலகங்களில் பணிபுரிவதற்காக சுமார் 5 ஆயிரம் சவூதியர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பரீட்சைக்காக உள்நாட்டு அரச சேவைகள் அமைச்சு தனது இணையத்தளத்தில் அழைப்புவிடுத்தன் பின்னர் மேற்படி அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பரீட்சைக்கு வருபவர்களில் முறையற்ற ஆடை அல்லது ஒழுங்கீனமான சிகை அலங்காரம் கொண்டவர்கள் தடை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 comments :
Post a Comment