அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் வித்தயாரம்ப நிகழ்வு - பிரதம அதிதியாக ஸக்கி



ஏ.ஜி.ஏ.கபூர் ,அக்கரைப்பற்று-

ந்த வருடம் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வித்தயாரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில்; இன்று (22) வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.நயிமுதீன் தலைமையில் நடைபெற்றது.

இவ் வித்தியாரம்பம் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் ;கியாஸ், அட்டாளைச் சேனை, தேசியக் கல்விக் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.நவாஸ், கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.ஏ.கபூர், உதவிக் கல்விப் பணிப்பாளாகளான ; எம்.எல்.லாபிர்,எம்.ஏ.அபூத்தாஹிர், ஆயிஸா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.ஏ.ஹைய்யூ ,பிரதி அதிபர் எம்.எஸ்.கலீல், மற்றும் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

புpரதம மற்றும் கௌரவ அதிதிகளை பாடசாலை அதிபர் பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பாடசாலை சமுகம் மாலை அணிவித்து வரவேற்ற அதே வேளையில் வித்தியாரம்பம் நிகழ்விற்கு வருகை தந்த புதிதாக தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று பதக்கம் அணிவித்து வரவேற்றனர்.

புpரதமஅதிதி மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தேசிய கொடியை ஏற்றி வைக்க கௌரவ அதிதி பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் ;கியாஸ் மாகாணக் கொடியையும்,பாடசாலைக் கொடியை அதிபா எம்.எஸ்.ஏ.நயிமுதீன ஆகியோர்கள் ஏற்றி வைக்க மாணவர்கள் தேசிய கீதம் இசைத்தனர்.

;மாணவர்களின் கிறா அத் மற்றும் வரவேற்புப் பாடலைத் தொடர்ந்து மௌலவி எம்.எம்.கலாமுல்லா அவர்கள் துஆப் பரார்த்தனை செய்து வித்தியாரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு அவரைத் தொடர்ந்து பிரதம அதிதி அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி கௌரவ அதிதிகளான அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் ;கியாஸ், அட்டாளைச் சேனை தேசியக் கல்விக் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.நவாஸ், கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.ஏ.கபூர், உதவிக் கல்விப் பணிப்பாளாhகளான எம்.எல்.லாபிர், எம்.ஏ.அபூத்தாஹிர்,ஆயிஸா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.ஏ.ஹைய்யூ ,பிரதி அதிபர் எம்.எஸ்.கலீல், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஐ.எ.கபூர் மற்றும் உதவி அதிபர்கள்,சிரேஷ்ட ஆசிரியர்கள் 97 புதிய மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்தனர்.

வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.நயிமுதீன் அவர்களின் தலைமையுரையினைத் தொடர்ந்து பிரதம அதிதி அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி, கௌரவ அதிதிகளான அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் ;கியாஸ்: கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.ஏ.கபூர்ஆகியோர் புதிதாக சேர்ந்து கொண்ட வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்ட மாணவர்களை வாழ்த்தினார்கள்.

இறுதியாக புதிய மாணவர்களுக்கு பாடசாலை சீருடையும்,கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :