ஜனாதிபதி தேர்த லில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியில் ஒரு வேட்பாளர் கூட இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு விடுதிக்கட்டி டத்தை நிர்மாணிப்பத ற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவம் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையினை முஸ்லிம்களாகிய நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் தாண்டி 165 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியில் ஒரு வேட்பாளர் கூட இல்லை.
சிலர் தன்னைத்தானே வேட்பாளர் எனக் கூறிக் கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட போட்டியிடுவதில்லை எனக் கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களில் 15 இலட்சம் மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் அமோக வெற்றியீட்டும். இந்த சூழ்நிலைகளை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நமக்குள் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் அவற்றை பேசீத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்று மாணவிகள் கல்வியில் அதிக அக்கறை காட்டுவது போன்று ஆண் மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை. 60 தொடக்கம் 65 வீதம் வரையிலான பெண்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதுடன் 35 வீத ஆண்களே கல்வியில் அக்கறை காட்டுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் இந்த நிலைதான் காணப்படுகின்றது. ஆண்களின் கல்வி குறைவடைந்து செல்லும் அதே நிலையில் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடை ந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment