முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பற்றிய அதிர்ச்சித் தகவல் - ஊடகங்களில் கசிவு

ஸிமால் அஹமட்
ஸ்லாத்தின் ஜென்ம விரோதி நாடான இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து, அங்கு முக்கிய உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பற்றிய அதிர்ச்சித் தகவல் இப்பொழுது ஊடகங்களில் கசிந்துள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுத்தீன் இஸ்ரேலுக்கு சென்ற வாரம் சென்றதோடு, அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் சிறைக்கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும் உடன்படிக்கையொன்றிலும் அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டதாக இலங்கையின் பிரபல ஆங்கில தினசரியொன்று திங்கள் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. சந்திரரத்ன பல்லேகமவும் அதில் ஒப்பமிட்டதாகவும் அப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் இந்த இஸ்ரேல் விஜயத்தை தொடர்ந்து முஸ்லிம் வட்டாரங்களில் இப்பொழுது அது பற்றி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த விவகாரமானது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முஸ்லிம்கள் மத்தியில் அபகீர்த்தியையும், களங்கத்தையும் ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால், இச் செய்தி தமிழ் மொழி மூல ஊடகங்களுக்கு தெரியவராதவாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை சந்திரசிரி கஜதீர வகித்து வருகிறார்.

பொதுவாக இவ்வாறு இரு நாடுகளுக்கிடையில் சிறைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறும் உடன்படிக்கைகளில் இலங்கையின் சார்பில் நீதியமைச்சரே கைச்சாத்திடுவது வழக்கமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :