இன்று வெளியான சட்டக்கல்லூரி பரீட்சை முடிவுகளைப் பார்த்து தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கை சட்சக்கல்லூரிக்கு 2014ம் ஆண்டுக்கான மாணவர் தடைதாண்டல் பரீட்சை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் சட்டக்கல்லூரியின் 2014ம் ஆண்டிக்கான முடிவுகள் தற்போது சட்டக் கல்லூரியின் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இப்பரிட்சை முடிவுகளின் படி 177 மாணவர்கள் இவ்வருடத்தில் சட்டக் கல்லூரியில் கல்விகற்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளி 66 ஆகும். இதில் 18 மாணவர்கள் மாத்திரமே தமிழ் மூல பரிட்சாத்திகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களில் 14 முஸ்லிம் மாணவர்களும் 4 தமிழ் மாணவர்களும் அடங்குகின்றனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் தமிழ் மொழி மூலமான மாணவர்கள் மிகவும் குறைவானவர்களாக உள்ளனர்.
2013ம் ஆண்டு 70க்கு மேற்பட்ட தமிழ் மொழி மூலமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இம்முறை மிகவும் குறைவான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமையானது மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இம்முறை வெளியான முடிவுகளின் படி இரண்டாம் இடத்தை ஒரு முஸ்லிம் மாணவனும் நான்காம் இடத்தை ஒரு தமிழ் மாணவனும் பிடித்துள்ளனர்.
இப்பரீட்சை முடிவுகள் இலங்கையின் மக்கள் தொகை விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் அதிகளவான தமிழ் மொழி மூலமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதற்கு பல பெரும்பான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இரண்டாம் சுற்றில் அதிகளவான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .(SLM)
தெரிவு செய்யப்பட்ட தமிழ் மொழி மாணவர்களின் பெயர்கள் சில
எச்.உபைதுல்லாஹ் 79 ஏறாவூர்
றேகன் 77 அக்கரைப்பற்று
சபீல் 77 நுறைச்சோலை
றிஷ்வானா 75 காலி
ஹம்சாத் 75 கொழும்பு- 01
பாத்திமா 71 கொழும்பு- 15
பிறிந்தினி 70 கொழும்பு-12
இன்சாத் 69 காத்தாங்குடி
சபீனா 69 பம்பரதெனி
பேகம் 69 அக்குறனை
அக்கீலா பானு 68 கண்டி
கஸ்தூரி 68 யாழ்ப்பாணம்
இளமுருகன் 68 இனுவில்
றிசான் 68 கெனுகொல்ல
நப்ரீஸ் 68 மன்னார்
நிப்ரினா 67 காலி

0 comments :
Post a Comment