பருத்தித்துறையில் கரையொதுங்கிய மூங்கில் வீடு - மக்கள் திரண்டு சென்று பார்வை - படங்கள்



யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை முனைப்பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கில் வீட்டை மக்கள் திரள் திரளாக சென்று பார்வையிட்டுவருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மதியம் 12 மணியளவில் கரை ஒதுங்கிய இந்த மூங்கில் வீடு சுமார் 10 பேர் வரை வசிக்க்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இவ்வகை வீடுகள் கடல் தொழிலுக்காக கம்போடியா – தாய்லாந்து மற்றும் சீனாவில் தயார் செய்யப்படுகிறது. மேற்படி வீட்டை பார்வையிட்ட கடலோடி வயோதிபரான சின்னத்தம்பு நாயர் தெரிவிக்கையில்..

இந்த மூங்கில் வீடு சுமார் 5 வருடங்கள் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாக தெரிவித்ததோடு தனது வாழ்நாளில் 15க்கு மேற்ப்பட்ட மூங்கில் வீடுகள் காற்றினால் இழுத்து வரப்பட்டு யாழ். குடாநாட்டு கரையோரங்களில் ஒதுங்கியதையும் தாம் பார்வையிட்டதையும் நினைவுகூர்ந்தார்.
H2H3H4
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :