சுகவீனமுற்ற தந்தையை பராமரித்து பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவன் -நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம்

ல்­க­லை­க்­க­ழக கற்­கை­நெ­றியை தொடரும் தனது கனவு நிறை­வே­று­வ­தற்­காக பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளாகி உடல் செய­லி­ழந்து தனது முழு நேர கவ­னிப்பில் இருக்க வேண்­டிய நிலை­யி­லி­ருந்த தந்­தையை அலட்­சியம் செய்து பிரிந்து செல்ல விரும்­பாத மக­னொ­ருவர், தனது தந்­தையை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தான் தங்­கி­யி­ருந்த அறைக்கு அழைத்து வந்து பரா­ம­ரித்­து­வரும் நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மத்­திய சீனாவில் அன்­குயி மாகா­ணத்­தி­லுள்ள லியுவான் நகரைச் சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளை­ஞரே இவ்­வாறு தனது தந்­தையை பரா­ம­ரித்­த­வாறு பல்­க­லைக்­க­ழக கல்­வியை தொடர்ந்து வரு­கிறார்.
குவோ ஷிஜுனின் தாயாரும் மன­நலப் பாதிப்­புக்­குள்­ளாகி பிறரின் முழு நேர கவ­னிப்பில் இருக்க வேண்­டிய நிலை­யி­லுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன் கார­ண­மாக சிறு வய­தி­லேயே தனது தாயாரை பரா­ம­ரிக்க வேண்­டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்­ளானார்.
இந்­நி­லையில் நிர்­மாண தொழி­லா­ளி­யான அவ­ரது தந்தை பால­மொன்றில் பணி­யாற்­றிய வேளை 30 அடி உய­ரத்­தி­லி­ருந்து தவறி கீழே விழுந்­ததால் படு­கா­யத்­துக்­குள்­ளாகி பாரிச வாத பாதிப்­புக்­குள்­ளானார்

இதனால் ஏற்­க­னவே தனது தாயாரைக் கவ­னிக்க வேண்­டிய நிலை­யி­லி­ருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்­காக அதி­க­ரித்­தது.
அள­வுக்­க­தி­க­மான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்­வியை கைவி­டாத அவர் சீனா­வி­லுள்ள முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வானார்.

இத­னை­ய­டுத்து குடும்ப பொறுப்­புக்­காக பல்­க­லைக்­க­ழக கல்­வியை தியாகம் செய்­வதா அல்­லது பல்­க­லைக்­க­ழக கல்­விக்­காக குடும்ப பொறுப்பை அலட்­சியம் செய்­வதா என்ற பெரும் குழப்ப நிலைக்கு குவோ ஷிஜுன் உள்­ளானார்.

அவ­ரது மன­நலம் பாதிக்­கப்­பட்ட தாயாரை பரா­ம­ரிக்கும் பொறுப்பை அவ­ரது பாட்­டாவும் பாட்­டியும் ஏற்­றுக்­கொண்ட போதும், பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளா­கிய தந்­தையை பரா­ம­ரிக்க எவரும் முன்­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் தீவி­ர­மாக சிந்­தித்த குவோ ஷிஜுன், குறிப்பிட்ட பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தை அணுகி தனது நிலையை விப­ரித்­துள்ளார்.
அவ­ரது நிலை­மையை அறிந்து அவர் மீது அனு­தாபம் கொண்ட பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம், பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் குவோ ஷிஜுனுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அறையில் அவ­ரது தந்­தையை வைத்து பரா­ம­ரிப்­ப­தற்கு அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

தற்­போது குவோ ஷிஜுன் பல்­க­லைக்­க­ழக வளாகத்திலுள்ள தனது அறையில் தனது தந்தையை தங்க வைத்து பாடசாலை பாடங்களிடையே அவரை கவனித்து வருகிறார்.

அவர் தனது நண்பர்களிடமும் உறவினர் களிடமும் பணத்தைக் கடனாகப் பெற்றே தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :