நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகள் -முனாஸ்

எம்.பைஷல் இஸ்மாயில்-

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 1443 ஆவது பிறந்ததினத்தை கடந்த செவ்வாய்க்கிழமை உலக முஸ்லிம்கள் நினைவு கூறுகின்றனர். எனவே இத்தினத்தை கண்ணியப்படுத்தும் பொருட்டு நாட்டின் பல பாகங்களிலும் நபிகளாரின் பிறந்த தினத்தை நினைவு கூறும் முகமாக பள்ளிவாசல்களிலும், குர்ஆன் மத்ரிஸாக்களிலும் விஷேட மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை மத்ரஸத்துல் ஹம்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி தின நிகழ்வு நேற்று இரவு மௌலவி அப்துல் றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில், புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் மிக பரவலாக காணப்படும் இந்த மீலாது விழாக் கொண்டாங்களும் ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா நடத்துகின்றனர்.

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்ன என்பதைப்பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில், இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எதை செய்யக்கூடாது என்பதையும் போதிக்கிறது.

குறிப்பாக அதைச் சொன்னால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் என இவ்வாறு எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும், வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தும், காட்டியும் வாழ்ந்து காட்டி மரணித்தவர் தான் எம் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவர் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :