விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்களின் வசூல் நிலவரம்

விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம். 

இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீஸான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஜில்லா மற்றும் வீரம் ரிலீஸான 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரங்களை பார்ப்போம்.

இங்கிலாந்தில் ஜில்லா படம் ரிலீஸான 17 நாட்களில் ரூ.2.54 கோடி வசூலித்துள்ளது. அஜீத்தின் வீரம் அதே 17 நாட்களில் ரூ.1.20 கோடி வசூல் செய்துள்ளதாக பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஜில்லா தற்போது ஒரு தியேட்டரில் மட்டும் ஓடுகிறது. இந்நிலையில் அப்படம் கடந்த 17 நாட்களில் ரூ. 24.06 லட்சம் வசூல் செய்துள்ளது. தற்போது ஒரு தியேட்டரிலும் வீரம் படம் ஓடாத நிலையில் ரிலீஸான 10 நாட்களில் ரூ.44.94 லட்சம் வசூலித்துள்ளது.

மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ஜில்லாவும், வீரமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலேசியாவில் ஜில்லா 17 நாட்களில் ரூ.1.70 கோடியும், வீரம் ரூ.1.63 கோடியும் வசூல் செய்துள்ளது.

ஜில்லாவும், வீரமும் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டு படங்களின் தாயரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் வசூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :