ந.குஹதர்சன்
ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் வாழைச்சேனை பொலிஸாரும், வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகம், அந்நூர் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் டெங்கு நுளம்மைப் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான அடிப்படையில் பிரதேசங்களைத் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது ஒலி பெருக்கியில் மக்களை அறிவூட்டியதோடு, பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களும், பிரதேச வீடுகளைப் பரிசோதனை செய்து டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இருப்பிடங்களை வைத்திருந்த சுமார் 14 பேருக்கெதிராக வழங்குத் தாக்கல் செய்யப்பட்டதாக கோறளைப்பற்று மத்தி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment