தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவருடன் நேர்காணல் - முழுவிபரம் வருமாறு

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுடனான நேர்காணல். அப்துர் றஹ்மான் பரீட

பழுலுல்லாஹ் பர்ஹான்-

01. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைமை பதவியில்-

நான் மகிழ்ச்சியடைவது வேலைசெய்வதால்தான். எனக்கு வேலைசெய்ய இல்லாவிட்டால் நடுக்கம் ஏற்படுவது போன்று உணர்கிறேன். இதனால் வேலை செய்வதை விட இன்பமான விடயங்கள் எனக்கு இல்லை. வேலையில்தான் எனது காலம் போகிறது. இதனால் எனது குடும்பத்திற்காகவும் அதிக காலம் செலவிட முடியாதிருக்கிறது. நான் செய்யும் வேலையை சரியாக செய்வதைக் கொண்டுதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் தொழிலில்; அது தொடர்பான பணிகளை சரியாக செய்வதில் நான் திருப்தி அடைகிறேன்.

02. வழக்கறிஞர் தொழில் - (வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடாவிட்டாலும் நீங்கள் அதனை பெயருக்கு முன்னால் பயன்படுத்துகிறீர்கள். அது உங்களுக்கு ஆபரணமா?)

வழக்கறிஞர் தொழில் எனக்கு ஆபரணம் அல்ல. எனது பெயருக்கு முன்னால் அதனை பயன்படுத்துவது அதுவும் நான் அந்த தொழில் தொடர்பில் பெற வேண்டிய தகுதியை பெற்றிருப்பதாலாகும். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடும் எவராயினும் அதனை உலகுக்கு தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவ்வாறு அறிவுறுத்தப்பட வேண்டும். தவறு செய்தால் எமது கருப்பு அங்கியை கழற்ற உச்ச நீதிமற்றத்திற்கு முடியும். பெயருக்கு முன்னால் அந்த பதவியை போடுவதால் வழக்கறிஞர் என்பதை உலகம் தெரிந்துகொள்ளும். இதன் காரணமாக தவறு செய்ய முடியாது. சிலவேளை என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் தெரிந்துகொள்வார்கள், இவர் வழக்கறிஞர் இவரிடம் எமது விளையாட்டு சரிவராது என்று. அவ்வாறு பார்க்கப்போனால் வழக்கறிர் தொழில் ஆபரணம் அல்ல ஆயுதமாகும்.

03. அரசில்-

நான் எனது மனச்சாட்சிக்கு அமைவாகத்தான் அரசுடன் செயற்படுகிறேன். எமது நாட்டில் இருக்கும் சட்டத்திற்கு மற்றும் அரசுக்கு அமைய நான் தவறு செய்வதில்லை. இதன்மூலம் இந்த பாரிய செயற்பாட்டுக்கு கீழ் இருந்துகொண்டுதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நினைக்கின்ற மற்றும் உணர்கின்ற வகையில் பஞ்சசீல கொள்கையை சரியான முறையில் கடைபிடிக்கும் ஒரே அரசு இதுதான். மஹிந்த சிந்தனைக்கு அமையவே அது எமக்கு கிடைக்கப்பெற்றது. இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்தே பெரும்பாலான கொள்கைகள் செயற்படுகிறது. எனவே இதன்மூலம் நான் கட்டாயம் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நாட்டு மக்களின் பணத்தை செலவிட்டே நான் கல்வியை பெற்றேன். இதனால் இந்த அரசின் ஊடாக மக்களுக்கு நன்மை கிடைத்தது என்பது எப்போதும் எனது சிந்தையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

04 இளைஞர் பாராளுமன்றத்தில்-

நான் இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரானதன் பின்னர் நாம் செய்த பாரிய வேலைத்திட்டம்தான் இதுவாகும். இதன் மூலம் நான் பாரிய திருப்தியை அடைகிறேன். இது ஆரம்பிக்கப்படும்போது பாரிய அளவில் தர்க்கங்கள், வாத விவாதங்கள் எழுந்தன. இதன்மூலம் சாதாண சம்பிரதாய அரசியல்வாதிளை உருவாக்க முயற்சிக்கிறீர்களா என்று ஒரு சிலர் என்னிடம் கேட்டனர். இந்த இளைஞர்களை அந்த கேவலமான அரசியல் சகதிக்குள் தள்ளப்போகிறீர்களா என்றும் ஒருசிலர் என்னை கேட்டனர். மேலும் சிலர் இந்த இளைஞர்களை தற்போதிருக்கும் முறைக்கான வித்தாக இடப்போகிறீரா என்று கேட்டனர். ஆனால் நாட்டை பற்றி நினைக்கும் அதற்காக வேலைசெய்யும் கொள்கை கொண்ட இளைஞர் சமூகம் ஒன்றை இளைஞர் பாராளுமன்றத்தி;ன் ஊடாக உருவக்க முடிந்தது. அதற்காக எம்மால் மகிழ்ச்சி அடைய முடியும்.

05 தேசிய இளைஞர் கொள்கையில்-

இது தொடர்பில் எப்போதும் இருந்தது 'இன்றில்லை நாளை' என்ற கொள்கைதான். எனினும் இன்று நாட்டிலிருக்கு அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் தேசிய இளைஞர் கொள்கை ஒன்றை அமைக்க எம்மால் முடிந்திருக்கிறது. தற்போதிருக்கும் தேவைக்கு அமைய உருவான இந்த கொள்கை, அரசியல் கட்சி பேதம் இன்றி பெப்ரவரி 14 ஆம் திகதி அதாவது காதலர் தினத்திலே இந்த நாட்டு இளைஞர்களிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நான் தேசிய இளைஞர் சேவை மன்றத்திலே தலைவராகி கழிந்திருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்குள் விசேடமான வெற்றியாக இதனை குறிப்பிட முடியும். இது தொடர்பில் நான் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

06 'மதுவுக்கு முற்றுப்புள்ளி' கொள்கை

இந்த நாட்டின் தற்போதைய இளைஞர் சமூகத்தின் பெரும்பங்கினர் போதைப்பழக்கத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர் என்று நான் நினைக்கின்றேன். நான் முன்னர் குறிப்பிட்ட தேசிய இளைஞர் கொள்கையில் இது பற்றி குறிப்பிடுகிறேன். இன்றைக்கு 10, 12, 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் புகைப்பிடித்த இளைஞர் சமூகத்துடன் ஒப்பிடுகையில் இன்று புகைப்பிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அரசு மது, புகையிலை தொடர்பில் இவ்வாறான கொள்கையை கொண்டுவருவது மாத்துரம் போதுமானதாக இருக்காது. இந்த மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது. அது இலகுவானதல்ல. உலகின் எந்த நாடும் இதனை 100 வீதம் நிறுத்தியதில்லை. அவ்வாறு நடப்பதும் இல்லை. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வறான கனவில் இருந்துகொண்டு மதுவுக்கு முற்றுப்புள்ளி கொள்கையை முன்கொண்டு செல்வது சாத்தியமில்லை.

07 High Way யில்-

இது எமது நாட்டுக்கு பாரிய ஓரு ஆசிர்வாதமாகும். இதனை பல காரணங்களை கொண்டு விளக்க முடியும். ஒன்றுதான் இதன் மூலம் எமது நாட்டின் வரலாறு மாறுதலுக்கு உள்ளாகிறது. எனது வீடு கடவத்தை. நான் எனது சிறு வயதில் கடவத்தையிலிருந்து கதிர்காமம் செல்லும்போது கண்ட கிரமங்கள், நகரங்கள், பாதைகள் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் இன்று பிள்ளைகளுக்கு கடவத்தையிலிருந்து கதிர்காமம் போகும்போது நான் பார்த்த வீதிகள், நகரங்களை பார்க்க முடிவதில்லை. இதன்மூலம் எமது வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த விடயம் என்னவென்றால் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் ஒப்பாக மிகப்பெரிய அளவில் நாட்டிற்குள் உருவாகும் இந்த ர்iபா றுயல திட்டத்தின் மூலம் மிக குறுகிய காலத்தில் அதிக வேலைகளை செய்து முடிக்க முடியுமாகியுள்ளது. இது கட்டாயம் செய்ய வேண்டியது. குறைந்தது யாழ்ப்பாணம் செல்லும்வரையாவது இது அமைக்கப்பட வேண்டும். ர்iபா றுயல யினால் கொழும்பில் இருக்கும் இளைஞனுக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இளைஞன் குறுகிய காலத்திற்குள் சந்திப்பதற்கு முடியுமாகிவிடும். அன்று இந்த கலாசார பரிமாற்றத்திற்கு போதுமான வசதிகள் கொண்ட போக்குவரத்து கட்டமைப்பு இல்லாமை தடங்கலாக இருந்தது. வடக்கில் இருப்போருக்கு தெற்கிற்கு வர, தெற்கில் இருப்போர் வடக்கிற்கு செல்ல ஆரேக்கியமான தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த ர்iபா றுயல சிறந்த வழியாகும்.



08 கொண்டுவர முயற்சிக்கும் கசினோ திட்டம்-

பௌத்த தர்மத்தின்படி இது தவறென குறிப்பிடப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் பகடைக்காய் விளையாட்டின் வளர்ச்சிதான் கசினோ என்பது. இந்து மதத்திற்கு முன்னர் இருந்து இன்றுவரை இவ்வாறானவை இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். அன்றும் இதனை வேரறுக்க முடியுமாக இருக்கவில்லை. இவ்வாறான திட்டங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் நாட்டின் கலாசாரத்திற்கும் பாதகமில்லாத வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். இதனை இந்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவைகளுடன் எவ்வாறு கொடுக்கல் வாங்கல் செய்வது என்பதை. பல்வேறுபட்டவர்களும் இது பற்றி பேசுவதை விடவும் செய்வது வெறுமனே செறு பூசுவதாகும். அறிவுபூர்வமான விவாதம் ஒன்றுக்கு செல்வதே முக்கியம் என நான் கருதுகிறேன்.



09 எதிர்வரும் தேர்தலில்-

என்னவென்றால் நான் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் என்ற வகையில் நான் அரசியல் பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் பொறுப்புகளுக்கு அமைய அது தொடர்பான அமைச்சு மற்றும் தொடர்பான அமைச்சருடன் நான் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன். நீலம், மஞ்சள், சிகப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கு அப்பால் சென்று இந்த நாட்டு இளைஞர்களுக்கு இளைஞர்களின் உண்மை நிறத்தை பெற்றுக்கொடுக்கவே நான் எப்போதும் முயற்சிக்கிறேன். எனினும் இந்நாட்டின் அதிகார மட்டத்தில் இருப்பவர் என்ற வகையில் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எந்த சவாலும் இல்லை மற்றும் போட்டியும் இல்லை. ஜனநாயக நாடொன்றின் உரிமைதான் வலுவான எதிர்க்கட்சி ஒன்று இருப்பது. துரதிருஷ்டவசமாக எமது நாட்டில் அப்படி ஒன்று இல்லை. ஆனாலும் அவ்வாறு இருப்பது ஒருபக்கத்தில் நல்லதும் கூட. யுத்தம் ஒன்று முடிந்து நாம் வேகமாக அபிவிருத்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். உலகில் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்த கொரியா போன்ற நாடுகள் அவ்வாறான யுத்தத்திற்கு பின்னர் எழுந்து நின்ற நாடுகளாகும். இதன்போது அரசியல் ஸ்திரத்தன்மையே முக்கியமானதாகும்.



10 'நடிகைகள்' அரசியலுக்கு வருவதால்-

இங்கு நடிகையா நடிகரா என்பதல்ல பிரச்சினை. யாராக இருந்தாலும் அரசிலுக்கு வருபவர்களுக்கு அது தொடர்பில் அனுபவம் இருப்பது மக்களுக்கு புரிகிறதா, கொள்கை தயாரிக்கும் அளவுக்கு அறிவு இருக்கிறதா, நாட்டின் பிரச்சினை தொடர்பில் எந்தளவுக்கு புரிதல் இருக்கிறது என்பவையே முக்கியமாகும். இந்த விடயங்கள் பற்றி தெரியாமல் அரசியலில் இறங்குவது என்றால் அது பாரிய தவறு. பிரபலம், ஜனரஞ்சகம் இருப்பதனால்; இவர்களை மக்கள் தனியாக அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. இதன்போது அனுபவம் மிக்க பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு அநியாயமே இழைக்கப்படுகிறது. அரசியலுக்கு பரிசூட்டிலிருந்து வருவது எம்மை போன்ற நாடொன்றில் ஏற்படக்கூடாத விடயமாகும்.


11 வாகனங்களில்

வாகனங்களில் நான் பெரிதாக சுகபோகம் அனுபவிக்கவில்லை. எனக்கு எனது வேலையை செய்துகொள்ள, எனது பயணத்தை விரைவுபடுத்திக்கொள்ள பொருத்தமான வாகனம் ஒன்று இருந்தால் எனக்கு போதும். நான் தற்போது பயன்படுத்துவது ஜீப் ஒன்று. எனது பதவிக்கு அமைய எனக்கு கார் ஒன்றே கிடைக்கும். ஆனால் நான் அதனைக் கூட நிராகரித்தேன். ஏனென்றால் எனது பொறுப்புகளுக்கு அமைய யுஊ அறை ஒன்றில் 24 மணி நேரத்தை கழிக்க முடியாது. நான் எப்போதும் இந்த நாட்டு இளைஞர்களை சந்திக்க நாடெங்கும் செல்கிறேன். இந்த பயணங்களுக்கு காரை விட எனக்கு ஜீப் வண்டிதான் இலகுவாக இருக்கும். ஏனென்றால் இந்த கொழும்பை சுற்றியல்ல நான் எப்போதும் இருப்பது.


12 நண்பர்களிடமிருந்து

நண்பர்களால் நான் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் ஒருவர் நட்பை ஏற்படுத்திக்கொண்டால் இலகுவில் எவரும் என்னை மறப்பதில்லை. ஏனென்றால் நான் ஒருபோதும் நண்பர்களுடன் மோதுவதில்லை. மோதல் ஏற்பட இருவர் இருக்க வேண்டும். அவ்வாறான எந்த தருணத்திலும் இரண்டாமவராக மாட்டேன். சில வேளைகளில் எனது நண்பர்கள் என்னை விடவும் மாறுபட்ட அரசியல் கருத்து கொண்டவர்கள். மாறுபட்ட கல்வி, பொருளாதாரம், சமுக மட்டத்தில் இருப்பவர்கள். வெறு நாடுகளின் வேறு மொழி கதைப்பவர்கள். பொரும்பாலும் எனது நண்பர்கள் அவர்களது தனிப்பட்ட விடயங்கள் குறித்தும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்கு மிக நம்பிக்கையான செவிமடுப்பவராக இருப்பேன்.


13 காதலில்-

காதல் என்கின்றபோது பணிகளுக்கு நண்பர்களுக்கு இந்த அனைத்துக்கும் காதல் செய்ய முடியும். குறிப்பாக எனது இரு குழந்தைகளும். ஒருவருக்கு 04 வயது மற்றவருக்கு 05 வயது. அவர்கள் இருவரையும் காதல் செய்வதன் மூலம் நான் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைகிறேன். ஏனென்றால் எதிர்காலத்தில் மேலும் அவர்களுடன் எனக்கு இந்த அளவுக்கு அன்பு காட்ட முடியாமல்போகும். ஏனென்றால் அவர்கள் வளரும்போது கல்வி பெறும்போது அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடும். இந்த காலத்தில்தான் நான் மிக நெருங்கி குழந்தைகளுடன் பழகுகிறேன்.


14 அப்படி என்றால் மனைவியின் காதல்?

அந்த காதல் அவ்வாறே செல்கிறது. மாற்றம் எதவும் ஏற்படவில்லை.


15 விடுமுறை தினங்களில்-

முதல் விடயம்தான் எனக்கு அவ்வாறான விடுமுறை கிடைப்பதில்லை என்பது. எனக்கு அவ்வாறான விடுமுறை கிடைப்பது பெரும்பாலும் நான் வெளிநாடு சென்றிருக்கும்போதுதான். அப்போது எனது Phழநெ உயடடள வராமல் இருப்பதே எனக்கு சுதந்திரம். நான் தொடர்ந்து புத்தகங்கள் படிக்க பழகியிருந்த ஒருவர். ஆனால் பணிகள் காரணமாக அதனை செய்ய நேரம் இல்லாமல் போனது. ஆனால் ஓய்வு கிடைத்தவுடன் புத்தகங்கள், திரைப்படங்கள் பார்ப்பேன். இது தவிர நான் ஊசiஉமநவ விளையாடுவேன். முடியுமாக இருந்தால்.

16 இளமையில்

இலங்கையில் இளைஞர்கள் என்று வரையறுப்பது 15-29 க்கு இடைப்பட்டோரை. இந்த வரையறைக்குள் நான் இளைஞர் இல்லை. ஆனால் பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற நாடுகளின் வரையறைக்குள் இன்னும் நான் இளைஞன் தான். எனது தொழிற்துறைக்கு அமைய நான் எப்போதும் இளைஞர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன். 

எனவே நான் எனது பணியில் எப்போதும் இளைஞராக இருக்கிறேன். இளைய வயதில் இளைஞராக சிந்திக்க வேண்டும். வாழ வேண்டும். இளமையை பயன்படுத்த வேண்டும். இளமைக்கு தடைபோட வேண்டியதில்லை. இளமைக்கு சுநன டுiபாவ இல்லை. 

வயது போன பின் இவைகளை செய்ய முடியாது. இளவயதின் சுகபோகங்களை இள வயதில்தான் பெற வேண்டும். சிலவேளை வயதோடு உயிரியல் பண்புகளுக்கு அமைய எமக்கு பல விடயங்களை செய்ய முடியாமல்போகிறது. எனவே இளைஞர் பருவத்தில் பெற வேண்டிய உணர்வுகள், மகிழ்ச்சியை கட்டாயம் இளமை காலத்தில் பெற வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :