ஐ.சி.சி. பிரேரணையை பிற்போட வேண்டும் என கோரும் இலங்கை

ர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையைப் பிற்போட வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையினை முழுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய பிரேரணையொன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தயாரித்து ஏனைய கிரிக்கெட் சபைகளுக்கு வழங்கியுள்ளன.

வருமானத்தில் அதிக பங்கு, நிர்வாகத்தில் முழுமையான ஆதிக்கம், டெஸ்ட் பிரிவுகளில் 03 கிரிக்கெட் அணிகளும் தரம் இறக்கப்பட முடியாத தன்மை உட்பட பல அம்சங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக நேற்று மாலை கூடிய ஆராய்ந்த இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு, இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக எழுதுவது எனத் தீர்மானித்தது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவருக்கு இது தொடர்பாக எழுதுவதென இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு தீர்மானித்ததாகவும் அதில், இவ்விடயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழுவின் ஏகமனதான பார்வையைத் தெரிவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.

இது சம்பந்தமான விவாதம் இடம்பெறும்போது இலங்கை கிரிக்கெட் சபை தனது தனிப்பட்டதும் நேர்மையானதுமான பார்வையை முன்வைக்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :