பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்கள் தமக்கான வருடாந்த சம்பளவேற்றத்திற்கான விண்ணப்பங்களை அதிபர் மூலம் அனுப்பி இருந்தும் அவர்களுக்கான வருடாந்த சம்பள உயர்ச்சி இன்னும் வழங்கப்படவில்லை.
இதில் குறிப்பிட்ட சிலருக்கு உரியசம்பளவேற்றம் போடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய நிலுவைகள் வழங்கப்படவில்லை இன்னும் சிலருக்கு சம்பளவேற்றம் போடப்படவில்லை. அதற்கான நிலுவைகளும் போடப்படவில்லை.
பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டியது அவசியமாகும். இவர்களுக்கு 2013க்கான சம்பளவேற்றங்களை விரைவில் வழங்கி,உரிய நிலுவைகளையும் வழங்க அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்மென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment