ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கு வராததற்காக தென்கொரிய ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஓராண்டு தடை

தென்கொரியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லீ யாங் டேவ். 25 வயதான இவர் 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையரில் தங்கப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையரில் வெண்கலப்பதக்கமும் வென்றவர்.

ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கு வராததற்காக இவர் மீது உலக தடகள சம்மேளனம் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. போட்டி இல்லாத காலங்களிலும் வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். அப்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற விவரங்களை தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆனால் இதை செய்ய அவர் தவறி விட்டார். பேட்மிண்டன் சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு கழக அதிகாரிகள் மூன்று முறை முயற்சித்தும், அந்த விவரங்களை அவர் வழங்கவில்லை. இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு கழக விதிகளை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி வரை தடை நீடிக்கும்.

இதனால் கொரியாவில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் அவரால் பங்கேற்க முடியாது. இன்னொரு கொரிய பேட்மிண்டன் வீரர் கிம் கி-ஜங்குக்கும் இதே பிரச்சினைக்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :