தே.மு.தி.க – பா.ம.க கட்சிகளும் கைகோர்க்கின்றன- பலம் வாய்ந்த அணியாக மாறும் பா.ஜ.க. கூட்டணி

மிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. அணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.

தி.மு.க. அணியை பொறுத்தவரை, அக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 அணிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. நாடு முழுவதும் வீசும் நரேந்திர மோடி அலையை மட்டும் நம்பி களம் காணும் நிலையில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி இன்னும் வலுவான அடித்தளத்தை எட்ட வில்லை.

இதனால் கூட்டணி கட்சிகளுடன் கை கோர்த்து வெற்றிக்கனியை பறிக்க அக்கட்சி திட்டமிட்டது. இதன் பயனாக முதல் ஆளாய் போய் பா.ஜ.க. கூட்டணியில் வைகோ சேர்ந்து கொண்டார். பாரதீய ஜனதாவுக்கும், ம.தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கூட்டணியை மேலும் வலுவாக்க மற்ற கட்சிகளுடன் பாரதீய ஜனதா பேச்சு வார்த்தையை தீவிரப் படுத்தியுள்ளது.

தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. கட்சிகளையும் இக்கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசியலில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இந்த 2 கட்சிகளும் பா.ஜ.க. அணியில் கை கோர்க்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

அதிகமான தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதே இந்த 2 கட்சிகளுக்குமிடையே பிரச்சினையாக இருப்பதாகவும், அது சரி செய்யப்பட்டு விடும் என்றும் பா.ஜ.வினர் கூறுகிறார்கள்.

ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகியவையும் பா.ஜ.க. அணியில் சேர்ந்தே பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இன்னும் சில உதிரி கட்சிகளும் இக்கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டதால் பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக இக்கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

உளுந்தூர்பேட்டையில், பிப்ரவரி 2–ந் தேதி ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தும் விஜயகாந்த், பா.ஜ.க. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பிறகு பிப்ரவரி 8–ந் தேதி வண்டலூரில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அவருடன் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்ற தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :