சந்திரிக்காவினால் இதுவரை எமக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை: ஜம்இயதுல் உலமா சபை

மயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேரில் சென்று கேட்டுள்ளார்.

இதேபோல், கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களையும் தமது பிரதிநிதிகளை ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளர் முபாரக் மௌலவியிடம் இது தொடர்பில் அழைப்பு ஏதும் விடுக்கப் பட்டுள்ளதா ? என்று வினவியபோது இதுவரை அப்படியான எந்த அழைப்பும் எமக்கு விடுக்கப் படவில்லை , இனிமேல் விடுக்கப் படலாம் என்று தெரிவித்தார் .

இந்த கூட்டத்தை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இந்த கூட்டம் பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றை வரைய முக்கியஸ்தர்களின் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளனர்.என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .லமு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :