இலங்கை மண்ணில் இரத்தக் கரைபடவோ, அழிவடையவோ நாம் இடமளிக்கக் கூடாது – ஜனாதிபதி



பிறந்த மண்ணை வெற்றியின் மண்ணாக கருதி செயற்படவேண்டும் என எதிர்கால சந்ததியினரிடம் கேட்டுக்கொள்ளவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை ​தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து :-

“நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து எமது நாட்டில் இருந்து சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கு எழுதி அனுப்புகின்றனர்.ஆடு நணைகின்றது ஓநாய் அழுகிறததுப் போன்றுதான் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு சென்றுள்ளவர்களும் அழுகின்றனர்.

பிள்ளைகளை போன்று ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் பிறந்த மண்தான் உங்களது வெற்றி மண். இதில் இரத்தக் கரைபடவோ அழிவடையவோ இடமளிக்க வேண்டாம்.இதனையே நான் எதிர்கால சந்ததியினரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.”(nf)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :