இலங்கைக்கான மனித உரிமைகள் அமைப்பு தனது சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டம்

இக்பால் அலி-

லங்கைக்கான மனித உரிமைகள் அமைப்பு தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வண்ணம் தனது இன்னுமோர் கிளையை அண்மையில் வவுனியாவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்துவருகின்றது.

அதன் முதற்கட்டமாக (ர்சுழு) அமைப்பின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளும் வைபவம் 19.01.2014 ஆம் அன்று வவுனியா வைரவ புளியங்குளத்தில் ர்சுழு தற்காலிக அலுவலகத்தில் நடைபெற்றது.

வைபவத்தின் சிறப்பு அதிதியாக அவ்வமைப்பின் ஊடக இணைப்பாளர் அபூதாஹிர் நபீஸ் பங்கு பற்றி சான்றிதழ்களையும் அடையாள அட்டைகளையும் வழங்கிவைத்தார்.
வைபவத்தில் பல மாவட்டப் பிரதிநிதிகளும் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

அவர்களில் அனுராதபுர மாவட்டம் கெக்கிராவ பிராந்திய பிரதிநிதியாக அஷஷய்க் ரஹ்மதுல்லாஹ் ரபீக் பிர்தௌஸி (டீஐளு), (யுஊதுருஇ முவுது செயளாலர்) அவர்கள் சான்றிதழையும் அடையாள அட்டையையும் பெறுவதைப் படத்தில் காணலாம்.

இவ்வைபவத்தில் கலந்து சிறப்புரையாற்றிய நபீஸ் அவர்கள், மனித உரிமையைப் பாதுகாப்பதற்காகவே இவ்வடையாள அட்டை வழங்கப்படுகின்றது என்றும் மாறாக, வேலியே பயிரை மேய்ந்துவிடக் கூடாது என்பதையும் வினயமாக வேண்டிக் கொண்டார்.
மேலும், இவ்வைபவத்தில் 20 உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களும் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :