கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோணா ஆற்றில் கொலை செய்யப்ட்ட நிலையில் இளைஞனின் சடலத்தினை இன்று 24-01-2014 பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சாய்ந்தமருது தோணா ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதனை கண்ட பொதுமக்கள் கல்முனை பொலிஸாருக்கு அறிவித்தனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்தனர்.
கல்முனை நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்ததை அடுத்து தோணா விலிருந்த சடலம் மீட்கப்பட்டது. மீக்கப்பட்ட சடலமானது இரத்ததக் காயங்களுடன் காணப்பட்டதுடன் உரப்பைக்குள் வைத்து, கற்கள் கட்டப்பட்டு தோணாவில் வீசப்பட்டிருந்தன.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க அப்சான் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment