வெளிநாட்டு சக்திகளை பாதுகாக்கும் வஞ்சக பாதுகாப்பாளர்கள் அரசாங்கத்திற்குள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்-அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாகாண சபை அதிகாரங்களை குறைக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என தான் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தது இன்று இந்நிலை ஏற்படும் என முன்கூட்டியே அறிந்திருந்ததால் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற வட மாகாண சபைக் கூட்டத்தில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் யோசனைகள் சில முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து எதிர்காலத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது குறித்து அரசாங்க அமைச்சரவை பேச்சாளரை கேட்குமாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment