எம்.பைஷல் இஸ்மாயில்-
இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளையில் கடமை புரியும் வங்கி உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி பேசக்கூடியவர்களாக கடமையில் அமர்த்துமாறு வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த இலங்கை வங்கியில் கடமையாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் எல்லோரும் சிங்கள மொழியில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மூலம் வங்கி தொடர்பான ஆலோசனைகள், வங்கி பற்றுகள் ஆவணங்கள் மற்றும் அடகு வைத்தல் போன்ற கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களிடம் வாடிக்கையாளர்கள் தமிழ் மொழியில் உரையாட முடியாதுள்ளதாகவும், இதனால் தங்களின் வேலைகளை நிறைவேற்ற முடியாதவர்களாகவும் இருந்து வருவதாகவும் தாங்களின் அவசர வேலை கருதி பிரதேசத்தை விட்டு வெளியிடங்களுக்குச் சென்றால் வங்கி தொடர்பான விபரங்களை தொலைபேசி மூலம் கேட்டு அறிந்து கொள்வதில் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் வங்கி வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் வெளியிடங்களில் உள்ள காரியாலய வேலைகளை செய்து முடிக்க தடங்கள் ஏற்பட்டு வருவதாகவும் வேறு வேலைகளை லீவு காலங்களில் செய்து வருவதாகவும் தெரிவித்த இதேவேளை இது தொடர்பில் குறிப்பிட்ட வங்கியின் முகாமையாளரிடம் பல தடவைகள் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை இலங்கை வங்கி கிளையானது அக்கரைப்பற்று இலங்கை வங்கியின் கீழ் இயங்கிவருகின்றமையும், குறித்த வங்கியில் கடமையாற்றும் வங்கி முகாமையாளரைத் தவிர ஏனைய உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி பேசக்கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே அம்பாறை மாவட்டம் என்பது முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருந்தால் தழிழ் மொழியில் பேசக்கூடிய உத்தியோகத்தர்களை நியமித்தல் வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலம் வங்கி எதரிகால நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பல நன்மைகள் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகள் செயற்படுவதன் மூலம் பல முன்னெற்றப்பதையை அடையாலாம் என்பது உறுதியாகும்.
0 comments :
Post a Comment