பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 19-01-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் இம்தியாஸ் தலைமையில நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்களான டாக்டர் நிசாந்தினி ,டாக்டர் விவேகானந் ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட 100க்குப் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
சமூக நலன் பேணும் அமைப்பின் இவ் இரத்ததான முகாமில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , சமூக நலன் பேணும் அமைப்பின் உப தலைவர் டாக்டர் ஷியாம் மற்றும் ஊர் பிரமுகர்கள் ,உலமாக்கள்,புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் , சமூக நலன் பேணும் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த சமூக நலன் பேணும் அமைப்பில் சுமார் 60 இளைஞர் உறுப்பினர்கள் உள்ளதோடு சுகாதார ரீதியான சமூகப் பணிகளை குறுகிய காலத்தில் இவ் அமைப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment