அல்-ஹிக்மா' என்ற பெயரில் கனிஷ்ட பாடசாலை திறந்து வைப்பு - பிரதம அதிதியாக ஹரீஸ்MP


-பி.எம்.எம்.ஏ.காதர்-


ல்முனை கல்வி வலையத்தில் 64வது பாடசாலையாகவும், மருதமுனையில் 8வது பாடசாலையாகவும் 'அல்-ஹிக்மா' என்ற பெயரில் கனிஷ்ட பாடசாலை இன்று (2014-01-20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாடசாலையைத் திறந்து வைத்தார். 

பாடசாலை அதிபர் எம்.எல். எம். மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தரம் 1 மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.

விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். 

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.ஏ.மனாப். கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக், உதவிக்; கல்விப்பணிப்பாளர் ஏ.எல். சக்காப், ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக், பாடசாலையின் ஸ்தாபக அபிவிருத்திக் குழுவின் தலைவரும் காதி நீதிபதியுமான என்.எம்.இஸ்மாயில்(கம்தூன் ஜி.எஸ்) பொருளாளர் நியாஸ் எம் அப்பாஸ், என்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் உள்ளீட்ட பெரும் அளவிலானோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு பாடசாலை சார்பாகவும், கழகங்கள் சார்பாகவும் பொன்னாடைகள் பல போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 

அத்தோடு பாடசாலைக்கு பலர் அன்பளிப்புப் பொருட்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும் .
PMMA CADER
184 masjithul akbar road
Maruthamunai-01
Tel:0672223829
Mob:0772612095
E-mail:hamtha2007@yahoo.com





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :