-ஹாசிப் யாஸீன்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 'திதுலன திகாமடுல்ல' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது சம்மாந்துறை கல்லறிச்சல் பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களிலுள்ள வீதிகளை பார்வையிட்டதுடன் மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றனூஸ் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment