தென் ஆசியாவின் வயது கூடிய பெண்ணாக கருதப்படும் மாவனல்லை ஹெம்மாத்தகம பலத்கமு பிரதேசத்தைச் சேர்ந்த உக்கு அம்மா தனது 117 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
1897ஆம் ஆண்டு பிறந்த உக்கு அம்மாவுக்கு 7 பிள்ளைகள். அதில் 5 பிள்ளைகள் மாத்திரமே உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
உக்கு அம்மாவின் கணவரான பண்டியா 111 ஆவது வயதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தற்போது அவரின் குடும்பத்தில் 98 பேர் வாழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி உக்கு அம்மாவின் மறைவையடுத்து நேற்று முன்தினம் அவரின் இல்லத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் மற்றும் அதிகாரிகள் உக்கு அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment