குளத்துமடுக் கிராமத்தில் இருவருக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில் 24வயது இளைஞன் பலி

ந.குகதர்சன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குளத்துமடுக் கிராமத்தில் இருவருக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில் குமாரியன் ரட்ணசிங்கம் (வயது 24) என்ற குடும்பஸ்தர் நேற்று மரமணடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

அத்துடன் இந்தக் தாக்குதல் சம்பவத்தைக் கண்டு ஓடிவந்த இவரது சகோதரியான குமாரியன் நிர்மலா (வயது 28) என்பவர் காயமடைந்த நிலைiயில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் அப்புகாமி சுதாகரன் (வயது 20) என்பவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய கம்புடன் வாழைச்சேனை பொலிஸில் சரணடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபரும், இவரது இரண்டாவது மனைவியும் தொழிலுக்காக சவூதி ஆரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில் இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் இவரது இரண்டாவது மனைவியும் 02 வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பி தனது தாயின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

மரணமடைந்த நபர் மனைவியின் தாய் வீட்டுக்கு திங்கட்கிழமை மாலை சென்ற வேளையில் இரண்டாவது மனைவியின் சகோதரரனுக்கும் இவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைலப்பாக மாறியது. இதன்போது இரண்டாவது மனையின் சகோதரரனினால் இவர் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹுஜைன், பிரதேச பரிசோதனைக்கான சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகைள வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :