29வது ஸ்ரீலங்கா யூத் -ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர் லீக் சுற்றுப் போட்டி-படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-


29வது ஸ்ரீலங்கா யூத் -ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர்; லீக் சுற்றுப் போட்டி 10-02-2014 நேற்று திங்கட்கிழமை மஹரகம இளைஞர் நிலைய உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 28 ஆண்,பெண் அணிகள் கலந்து கொள்கின்றன.

தோடர்ந்து மூன்று நாட்கள் சுப்பர் லீக் போட்டிகள் இடம்பெறுகின்றன

முதல் நாள் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா,இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி சந்திம ராசபுத்திர,இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளரும் மொரட்டுவ பல்கலைகழகத்தின் விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளருமான ரத்ன முதலி,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்களான மனுல சமல் பெரேரா, அஜித் நாரகல,இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் சமன் அபயரத்தின ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்ட விளையாட்டை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்துவது பெருமை தரும் விடையம் என்று கூடக் கூறலாம் .தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கடந்த காலங்களில் பல்வேறு திறமையான வீரர்களை எமது நாட்டுக்கு உருவாக்கி கொடுத்துள்ளோம் அதனையிட்டு எமது நிறுவனம் பெருமைப்படுகிறது

இலங்கையிலுள்ள இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்க இச்சந்தர்ப்பத்தில் பிராத்திக்கிறேன் என தனது உரையில் தெரிவித்தார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிபகாரி சந்திம ராசபுத்திரவும் உரையாற்றிமை குறிப்பிடத்தக்கது.

அதிதிகள் நடுவர்கள், வீர. வீராங்கனைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :