மட்டு-புதிய காத்தான்குடி 4ம் குறுக்கு வீதி மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு - படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்கா வேலைத்திட்டத்தின் கீழ் 1 கோடி 70 இலட்சம் ரூபாய் செலவில் வடிகாலமைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு-புதிய காத்தான்குடி 4ம் குறுக்கு வீதி நேற்று 9 ஞாயிற்றுக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது மக்களின் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட இவ்வீதியை சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

காத்தான்குடி நகர சபை அளும்கட்சி உறுப்பினர் பாக்கிர் தலைமையில் இடம்பெற்ற இவ் வீதி திறப்பு விழா நிகழ்வில் சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் , ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சவுதி அரேபிய நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத்,சவூதி அரேபியாவின் சர்வதேச மனித மனிதவளங்களுக்கு பொறுப்பான அமைப்பின் தலைவர் கலாநிதி ஹமீட் அப்துல் றகுமான் அல் ஜப்பார், உதவிப் பேராசிரியர் பொறியியலாளர் அப்துல் மலீக், ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்; உட்பட ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :