'கடந்த வருடம் தலதா மானிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திரரத்ன தேரர் தெரிவித்தபடி மாடு அறுப்பதை நிறுத்துவதற்காக தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளதாகவும் அதில் 500பேர் அடங்கியுள்ளதாகவும்' பேரணியில் ஈடுபட்ட சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்தனர்.
'மாடு அறுப்பதை நிறுத்துவதற்காக இந்திரரத்ன தேரர் உயிர்த்தியாகம் செய்தார். அவர் வழியில் இன்னும் 499பேர் எஞ்சியுள்ளோம். இன்னும் ஒரு வார காலத்தினுள் மாடறுப்பு திறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர்த் தியாகங்களை எதிர்க்கொள்ள வேண்டி வரும்' அவர்கள் தெரிவித்தனர்.
'இது விடயமாக எந்த ஒரு அடிப்படையிலும் தாம் பதில் அளிக்க தயார்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
'இலங்கையில் பிற மத தடை சட்ட மூலம் உடன் கொண்டுவரப்பட வேண்டும்' 'இலங்கையிலுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் மாடறுப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும்' என்ற கோஷங்களை முன்வைத்தவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது பேரணியை முன்னெடுத்தனர்.
0 comments :
Post a Comment