முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் இலங்கை வாழ் மக்கள் அறிந்த ஒரு அரசியல் பிரமுகர்


இக்பால் அலி -
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.அர்ஷாட் நிசாம்தீன் இலங்கை வாழ் மக்கள் அறிந்த ஒரு அரசியல் பிரமுகர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்.

சிறந்த சமூக சேவையாளரான இவர் 2002 , 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு மா நகரத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் இவர் இரு முறை மாநகர சபை உறுப்பினராகச் சேவையாற்றியதன் காரணமாக கொழும்பு மாநகர மக்களின் உள்ளம் கவர்ந்த ஒருவராகத் திகழ்கிறார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார். தம் சேவையின் ஊடாக கொழும்பு மாவட்ட மக்களின் நேசத்துக்குரியவர் என்று சொல்லும் அளவுக்கு தம் பணிகளை திறன்படச் செய்துள்ளார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் பிரமுகராகத் திகழ்வதற்கு அவரது சமூகப் பணிகளே அடித்தளமிட்டுள்ளன என்று கூறலாம். இவர் 2002 ஆம் ஆண்டு முதன் முதலாக சிலேவைலன் 67 கொழும்பு ஜயா சாரணா குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர். இவர் கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கம், சாஹுல் ஹமீதிய்யா பள்ளிவாசல், பத்ரிய்யா பள்ளிவாசல் உள்ளிட்ட பல சமூக அபை;புக்களில் நீண்ட காலமாக முக்கிய உறுப்பினராக பணியாற்றிய காரணத்தினால் மக்களின் மனப்போக்குகள், தேவைகள், சவால்களை எதிர் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக அயராது பாடு படும் இவர் கொழும்பு வாழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவராவர் மாகாண சபை தேர்தல் தொடாபாக இவர் முஸ்லிம் முரசு பத்திரிகைக்கு வழங்கி செவ்வி.

நீங்கள் அரசியல் துறையில் ஈடுபடுவதற்கான நோக்கம் என்ன?

கொழும்பை எடுத்துக் கொண்டால் அங்குள்ள முஸ்லிம்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். தோட்டப்புறங்களில் சரியான வீடமைப்பு வசதிகளின்றி வாழ்கின்றனர். சுகாதாரம், கல்வி அடிப்படை வசதிகள் இல்லை. பெருமளவு இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஒட்டுநர்களாகவும், சிறு சாதாரண தொழில் புரிபவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை ஒரு பரந்துபட்ட சிந்தனை வயப்படுத்தி நமக்கானதோர் அரசியல் சமுக, பொருளாதார கட்டமைப்பு உருவாக்கி ஏனைய சமூகத்துடன் சமமாக வாழக் கூடிய நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் பெரும்பான்மையின சமூகத்தினர்கள் இந்நாட்டில் சகல வளங்களும் கொண்ட மக்களாக வாழும் போது ஏன் எம்முடைய கொழும்பு வாழ் மக்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.

இலங்கையில் எங்களுக்னெ நீண்ட வரலாறு ஒன்று உண்டு. எனினும் இந்தக் கால கட்டத்தினுள் நமது இலட்சிய பயணத்தில் எவ்வளவு தூரம் வெற்றிபெற்றுள்ளோம் என்பதனை நோக்குவதே என்னுடைய பொருத்தப்பாடாகவும் இருந்தது. நான் சில நேரம் சிந்திப்பதுண்டு எமது சமுதாயம் எங்களுக்கு எதிராகத் தீட்டப்படும் சதிகளின் மூலம் மூச்சுத்திணறி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுவது போல ஒரு நிலை இருக்கிறது. ஏனெனில் ஏதை எடுத்தாலும் முஸ்லிம்களுடைய காணிகளைச் சுவீகரித்து வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பெரும்பான்மையின மக்களைக் கொண்டு வந்து மீளக் குடியேற்றல் அல்லது முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலுள்ள காணிகளைச் சுவீகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து அதிகளவு பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் சரியான அரசியல் தளத்திலான பங்காற்றலை செய்யும் போதுதான் நமக்குரிய பாதுகாப்பைக் கட்டிக் காக்க முடியும் எனவும் இந்த அரசியலுக்குத் தான் அதிகம் சக்தி உண்டு என நான் விளங்கிக் கொண்டதனாலேயே அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான காரணமாகும் எனக் கூறுவேன்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். .இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்.

இந்த நிலை சரியாக எங்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்த்துகின்றது. கொழும்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரநிதித்துவங்களை இல்லாமற் செய்யும் பெரும் சமூகத் துரோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்துள்ளது. அதிகார வெறி என்கின்ற மனநோயில் இந்த முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மூழ்கி கிடப்பதைக் காணலாம்.

வடபுலத்திலிருந்து வெளியேற்றபட்ட மன்னார் மாவட்ட முஸ்லிம்களுடைய நிலை இன்னும் பரிதாபகரமானதாகவே இருக்கிறது. இன்னும் அவர்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்பட வில்லை. அதற்குள் கொழும்பு வாழ் மக்களுடைய நிலை தொடர்பாக இந்தக் கட்சிக்காரர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய பிரநிதித்துவம் குறையுமானால் இதற்கு இந்தக் கட்சிக்காரர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று நமக்குத் தேவையாக இருப்பது சமூக ஒற்றுமை. இந்த சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு மனிதர்கள் இந்த மாதரியான கீழ்தரமான அரசியல் முன்னெடுப்புக்களைச் செய்யமாட்டார்கள். மக்கள் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதால் முஸ்லிம்களுடைய பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதில் பெரும் கஷ;ட நிலையைத் தோற்றுக்கப் போகின்றது. இதனால் சகல கட்சிகளிலும் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும். இப்போட்டியானது ஆராக்கியமான சூழ்நிலையை முஸ்லிம்களுடைய தெரிவில் ஏற்படுத்தி விடாது. மாறாக முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை சிதறடித்து முஸ்லிம் பிரதிநித்துவத்தை இ;ல்லாமற் செய்யும் நிலையையே இந்த அரசாங்கம் மக்கள் காங்கிரஸின் தலைவராக ஊடாக ஏற்படுத்தியுள்ளது.

நாம் கடந்த வடமேல், மத்திய வட மாகாணத் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஐக்கிய கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளிலும் பரவலாக முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் எந்தவொரு அரசியற் கட்சியிலும் எதிர்பாத்த பிரதிநிதித்துவங்களை கிடைக்கவில்லை. அது மாத்திரமல்ல இருந்த பிரதிநிதித்தவங்கள் கூட இல்லாமற் போயியுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் மக்கள் மிகவும் யுத்திசாதுரியத்துடன் வெற்றிபெறுள்ளார்கள். ஆளும் தரப்பில் போட்டி உறுப்பினர்களையும் எதிர்த்தரப்பில் போட்டியிட்ட உறுப்பினர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களையும் அவர்களுடைய சனத் தொகைக்கும் மேலதிகமான விகிதாரசாரத்தைக் கொண் உறுப்பினர்களைத் தெரிவு செய்து வெற்றிபெற்றுள்ளார்கள். இவர்களுடையே காணப்படும் ஒற்றைத் தன்மை பரந்தளவிலான சிந்தனைப் போக்கு எங்கள் மத்தியிலுள்ள அரசியல்வாதிகளிடமில்லை

சமூக நோக்குக்காக கம்பஹா மாட்டத்தில் மக்கள் காங்கிரஸ் களமிறங்க வில்லை எனில் ஏன் கொழும்பு மாவட்டத்திலும் அந்த சமூக நோக்குத் தென்படவில்லை. இந்தக் கட்சி தோதல் களத்தில் குரோத மனப்பான்மையுடன் கொழும்பு மாவட்டத்திலுள்ள இருக்கின்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவங்களை இழக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே செயற்பட்டுள்ளது. இதன் காரணமாக நன்மையடைப் போவது பெரும்பான்மையின அரசியல் கட்சிகளே தவிர முஸ்லிம் வேட்பாளர்களோ, முஸ்லிம் மக்களோ அல்ல.

எனவே இவ்வியடத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் சிந்தித்து யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது பற்றி கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் சமூகத்திற்காக ஆற்றிய பங்களிப்பு என்ன ?

2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் திகதி எனக்கு என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகும். பெஸ்லைன் மக்கள் பரம்பரையாக வாழ்ந்த இடத்தில் தங்கள் உதிரத்தை வியர்வையாக்கி ஓடாய் உழைத்து கட்டிய குடியிருப்புக்களை நகர அபிவிருத் திட்டத்தின் கீழ் சிலேவைலன் வெளியேற்றம் செயற் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நகர அபிவிருத்தி திட்டத்தின் செயற் திட்டமாகயிருந்த போதிலும் பரம்பரை பரம்பரைiயாக வாழ்ந்த கட்டடங்களைவிட்டு நாங்கள் எங்கே செல்வோம் என்ற மன அங்கலாய்ப்பினால் அதனை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் விட்டுக் கொடுப்பின்றி அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டி நிர்ப்பந்த நிலைக்குத தள்ளப்பட்டனர். அதற்கு தலைமை தாங்க வேண்டியவனாக நானிருந்தேன்.

இந்த அராஜக செயலை தடுத்து நிறுத்துவற்காக நான் அன்று உயர் நீதி மன்றம் சென்று வெள்ளிக்கிழமை தடுப்பு ஆணையைப் பெற்று வந்தேன். அதனை மீறி அவர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டேன். அப்போ என்னை பொலிஸார் அடித்தனர் ஒரு பக்கம் இழுத்துச் சென்று வைத்திருந்தனர். இதன் பின்பு வெள்ளை வேன் என்னுடன் நகர சபை உறுப்பினர்களான சராப்தீன், பதுர்தீன் ஆகியோர்கiளைத் தேடின. நாங்கள் தலைமறைவாகியிருந்தோம். அதன் பின் இந்தக் குடியிருப்பாளர்களுக்கு வேண்டி அரசாங்கத்துடன் தொடராக பேசியதன் பயனாக பேஸ் லைன் 1000 வீடமைப்புத் திட்டப்பிரதேசத்தில் 400 வீடுகள் இந்தக் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 17 திகதி இதே பகுதியிலுள்ள 17 குடியிருப்பாளர்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளன. இவர்கள் இன்னும் அங்மிங்கும் வாடகை வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இவர்களுக்கான வீடுகளைப் பெற்றுக் கொடுகின்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு பல துன்பங்களை துயங்களையும் என்னுடைய அரசியல் வாழ்வில் பெற்றுள்ளேன் என்று குறிப்பிடலாம்.

நீங்கள் செய்த சேவைகள் தொடர்பாக சிறுது கூற முடியுமா?

ஆம். என்னுடைய சிறு பராயம் தொட்டு இன்று வரை கூடியளவு முழு மூச்சாக நின்று சேவைகளைத் தான் செய்து வருகின்றேன். அந்த வகையில் நான் கோடிக்கான செலவில் கல்வி அபிருத்தி முன்னெடுப்புக்களைச் செய்துள்ளேன். உள்வீதிகட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். வறிய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக அரச சலுகள் யாவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

பாடசாலைகளுக்கான அபிவிருத்திப் பணிகள் என்ற வகையில் குனசிங்கபுர அல் ஹிக்மா பாடசாலைக்கு முன் வாசல் கேட் உட்பட பாடசாலையில் இரு மாடி வகுப்பறைக் கட்டிவசதிகள் மற்றும் க. பொ. த. உயர் தர வகுப்புக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், கிராண்பாஸ் அல் நஸார் மஹா வித்தியாலத்திற்கு முன்வாயல் புதிய கேட் மற்றும் க. பொ. த. உயர் தரத்திற்காவ வசதிகள், டி. பீ. ஜயா கல்லூக்கு புதிய கேட் மற்றும் க. பொ. த. உயர் தரத்திற்காவ வசதிகள், அல் இக்பால் வித்தியாலத்தில் சிறுவர் பூங்கா நிர்மாணித்துக் கொடுத்தல் போன்ற இன்னும் பல்வேறு பாடசாலைகளுக்கு பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளேன்.

அத்துடன் வெல்லம்பிடிய. கொலன்னாவப் பிரதேசங்களில் 24 உள் வீதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ன. கொஹிலவத்த மைதானம் வாகனத் தரிப்பிடத்தை புனர் நிர்மாணம் செய்தல், 200 முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸ் மீட்டர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் சுய தொழில் வாய்ப்புக்களுக்காக 225 வறிய முஸ்லிம் குடும்பப் பெண்களுக்கு தையல் மிசின் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன் போன்ற ஏராளமான பணிகளை செய்துள்ளேன்.

ஒரு முஸ்லிம் பிரநிதித்துவம் இருக்கின்றபட்சத்திலேயே அரசாங்க சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்று சேவை செய்ய முடியும். எனவே தற்போதைய தேவையினைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்கும் எம்முடைய கல்விப் பிரச்சினைக்குத் தீர்வை எட்தவற்கும் இந்த தேர்தலை பெரும் வாய்ப்பாக நாங்கள் கருத வேண்டும்.

இதன் மூலம் பெருவாரியான சமூகப் பணிகளை என்னால் மேலும் தொடர முடியும் என்று குறிப்பிட்டுக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன ?

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைக் கல்வியை அபிவிருத்தி செய்வதன் ஊடாகத்தான் எமது சகல விடங்களிலும் அபிவிருத்தி முன்னெடுப்பைக் காண முடியும். கொழும்பு மாவட்டத்தில் 27 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாமையின் காரணத்தினால் தான் கொழும்பு மாவட்ட முழுவதும் முஸ்லிம்கள் பாரிய பின்னடைவைக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக கல்வி தொடர்பாக பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் கொழும்பு மாவட்ட முழுதும் முன்னெடுக்கப்பட வேண்டும்

குறிப்பாக இன்றைய விலைவாசி உயர்வு, பொருளாதார சூழ்நிலையில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் பெரிளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நிலையை புரிந்து செயற்பட வேண்டிய அவசரத் தேவைப்பாடு இருந்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கல்வி நிலை இல்லாமையின் காரணமாகத்தான் ஏனைய மக்கள் தாக்குப்பிடிக்கும் பொதெல்லாம் இந்த கொழும்பு மாவட்ட மக்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

எனவே கொழும்பு மாவட்ட முழுவதும் கல்வி தொடர்பான விழிப்புணர்வு நடடிக்கைகளில் ஈடுபட அனைத்து தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டு செயற்படவுள்ளேன். இது போன்று மேலும் பல சமூக சேவைப் பணிகளைச் செய்ய மீண்டும் என்னை வெற்றிபெற செய்யுமாறு மிகவும்; பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.




.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :