நடிகர் சூர்யாவின் தியாகராய நகரில் கட்டி வரும் புதிய வீட்டில் தீ விபத்து

டிகர் சூர்யா தியாகராய நகரில் கட்டி வரும் புதிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் உடனடி நடவடிக்கையால் உரிய நேரத்தில் தீ அணைக்கப் பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. பிரபல நடிகரான இவரது மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களே.

நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தனது பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தார் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் வகையில் அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது.

அந்த வீட்டிற்கான கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்குவதற்கென புதிய கட்டிடம் அருகிலேயே ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன.

எதிர்பாராத விதமாக அந்தக் கூரையில் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.

அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு படையினர் தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தினார்கள். யாரோ கட்டிடப் பணியாள் குடித்து விட்டு வீசிய சிகரெட் துண்டே தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப் படுகிறது.

எனினும், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :