-ஏ.ஜி.ஏ.கபூர்-
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கரைப்பற்று மா நகர சபைப் பிரதேசத்தை அனர்த்தங்களற்ற பாதுகாப்போம் சுகாதாரமும் நிறைந்த மாநகரமாக திட்டமிட்டு அபிவிருத்தி செய்வது சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் அக்கரைப்பற்று மாநகர பூங்கா மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டதோடு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் டபிள்யூ.ஜே.செனவிரத்ன, பிரதிப் பணிப்பாளர் ஜே.சோமசிறி, ஐக்கிய நாடுகள் சபையின் ஹபிடாட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் இந்து வீரசூரிய, அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாநகர பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம். மா நகர ஆணையாளர், ஏ.எல்.அஸ்மி, மாநகர சபை உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாரை மாவட்ட திட்டமிடல் உதவியாளர் யூ.எல்.ஏ.றிஸ்வானா மற்றும் திணைக்களத் தலைவர்கள்,; அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஹபிடாட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படவுள்ள இவ் அபிவிருத்தி சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி;யின் வரவேற்புரையுடனும், மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கியின் தலைமையுரையுடனும் ஆரம்பமானது.
பிரதிப் பணிப்பாளர் ஜே.சோமசிறி அவர்கள் இவ் உயர்மட்டக் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி விளக்கினார்; ஐக்கிய நாடுகள் சபையின் ஹபிடாட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் இந்து வீரசூரிய அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு செயற்படுத்தப்படல் வேண்டும், எவ்வாறு இணங்காணப்படல் வேண்டும் என விளக்கியதோடு அவரைத் தொடர்ந்து சிறப்புரை வழங்கிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு இனங்காணப்படல் வேண்டும் எனவும், எதிர்கால சந்ததியினரையும் கருத்தில் கொண்டதாக நீண்ட காலம் மக்களுக்குப் பயன்தரக் கூடியதான இயற்கை வளங்களையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யக் கூடியதான அபிவிருத்தித் திட்டஙகளை தயாரிப்பது சம்பந்தமாக விளக்கங்களை வழங்கினார்.
திணைக்களத் தலைவர்கள, மக்கள் பிரதி நிதிகள, அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அபிவிருத்தி சம்பந்தமாகக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
திணைக்களத் தலைவர்கள, மக்கள் பிரதி நிதிகள, அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அபிவிருத்தி சம்பந்தமாகக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment