வாழ்நாளில் உணவே உட்கொள்ளாத பெண் ஒருவர் பற்றி தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. உணவே உட்கொள்ளாமல் உயிர் வாழ முடிந்தால் என நாம் சில வேளைகளில் கற்பனை செய்திருக்கக் கூடும், உண்மையில் இந்தியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரினால் எந்தவிதமான திட உணவு வகைகளையும் உட்கொள்ள முடியாது.
இது வரமா அல்லது சாபமா என்று உறுதியாக சொல்ல முடியாத போதிலும், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு அருகாமையில் உள்ள சொனிபட் என்னும் கிராமத்தில் வாழும் 25 வயதான மஞ்சு தஹாரா ((Manju Dharra) என்ற யுவதிக்கு விசித்திரமான ஒவ்வாமை நோய் ஏற்பட்டுள்ளது. மஞ்வினால் ஒருவேளை கூட திடமான உணவு வகைகளை உட்கொள்ள முடியாது.
மீறி திட உணவு வகைகளை உட்கொண்டால் ஒரு சில நொடிகளில் உண்ட உணவு வாந்தியாக வெளியே வந்துவிடும். இந்த அரிய வகையிலான ஒவ்வாமை நோய்க்கு என achalasia பெயரிடப்பட்டுள்ளது. உணவுக் குழலில் திடமான உணவுப் பொருட்களை நகர்த்தும் பொறிமுறைமை குறித்த யுவதியின் வயிற்றுத் தொகுதியில் செயல்படுவதில்லை.
அப்படியென்றால் குறித்த யுவதி எவ்வாறு உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் கேட்பது எமக்கு புரிகிறது. திட உணவு வகைகளை உட்கொள்ள முடியாத மஞ்சு வஞ்சகம் இல்லாம் திரவ உணவு வகைகளை உட்கொள்கின்றார். அதாவது சாப்பிட முடியாத போதிலும் அவரால் குடிக்க முடிகின்றது. நாள் ஒன்றுக்கு 4 – 5 லீற்றர் வரையிலான பசும்பாலை மஞ்சு அருந்துவதாகவும், தேநீர் மற்றும் நீர் அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திட உணவு வகைகளை பார்த்தாலே அச்சம் ஏற்படுவதாக மஞ்சு தெரிவித்துள்ளார்.
இரண்டு வயது வரையில் இந்த நோய் பற்றி தமக்கு தெரியாது எனவும், பின்னர் பல மருத்துவர்களிடம் மருந்து எடுத்தும் மஞ்சுவினால் உணவு உட்கொள்ள முடியவில்லை எனவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment