ஹாசிப் யாஸீன்-
பொது மக்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்கும் நோக்கோடு கல்முனை மாநகர சபைகுட்பட்ட இறைச்சிச் கடைகளை நவீனமான முறையில் புனர்நிர்மாணம் செய்யும் வேலைத் திட்டத்தினை கல்முனை மாநகர சபை முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைவாக் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமாக பொதுச்சந்தையில் அமைந்துள்ள இறைச்சிக் கடைகள் நவீனமான முறையில் நிர்மானிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்களுக்கான இறைச்சி விற்பனை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் கட்டிடங்கள் பராமரிப்பு குழுத் தலைவரும், முன்னாள் சாய்ந்தமருது– மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.சீ.எம்.இக்பாலின் வழிகாட்டலில் இவ்வேலைத் திட்டத்தினை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் மேற்கொண்டுள்ளது.
இப்பொதுமக்கள் நலத்திட்டத்தினை முன்னெடுத்துள்ள கல்முனை மாநரக சபைக்கும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கும் பொதுமக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment