ந.குகதர்சன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எம்.பி.எம்.தாஹா மற்றும் டபிள்யு.எம்.எல்.எஸ்.சஞ்ஜீவ ஆகியோருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபரான பெண் 35 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஏ.ஜி.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் ஒரு வீட்டில் பதிணைந்து பவுனுக்கு அதிகமான நகைகள் களவு போனதான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்தே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி போன்ற பகுதிகளில் விற்கப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேறு எங்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஏ.ஜி.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment