முதற்தர அணியை துவம்சம் செய்து கண்டி அணி அமோக வெற்றி - படங்கள்



மு
தற்தர கழகங்களுக்கிடையிலான றகர் லீக் சுற்றுப் போட்டித் தொடரில் கண்டியில் இடம் பெற்ற போட்டியில் சீ.ஆர்.என்ட்.எப்.சி. அணியை துவம்சம் செய்து கண்டி அணி அமோக வெற்றி ஈட்டியது.

கண்டி நித்தவலை றகர் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற டயலொக் கேடயத்திற்கான இப் போட்டியில் ஆரம்பத்தில் போட்டி மந்தமாகவே இடம் பெற்றது.

இடைவேளைக்காகப் போட்டி இடை நிறுத்தப் படும்போது கண்டி ரசிகர்களின் குதூகலத்திற்கு தடை விதித்தாற்போல் 3-0 என்ற அடிப்படையில் கண்டி அணி முன்னிலையில் இருந்தது. இதனால் கண்டி ரசிகர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.

அதுவும் ஒரு பெனல்டியைப் பெற்றதன் மூலமே மேற்படி 3 புள்ளியும் கிடைத்தது.

அதேநேரம் சீ.ஆர்.என்ட்.எப்.சி. அணிக்குக் கிடைத்த பெனல்டியைத் தவற விட்டதால் 3-0 என்ற நிலையில் முதலாம் பாதி ஆட்டம் நிறைவுற்றது.

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமானது முதல் கண்டி அணி வழமைபோல் ஆக்ரோஷமாக விளையாடத் துடங்கியது. ரோசான் வீரரத்ன வைத்த ஒரு ட்ரை கோலாக மாற்றப்பட்டு 10-0 என்ற நிலையை அடைந்தது. அதிலிருந்து இடை விடாது ட்ரைகளை கண்டி அணி வைத்துக் கொண்டே சென்றது.

ஆறாவது ட்ரை வைத்து சில வினாடிகள் கூடத் தாண்ட முன் எதிரணியின் கிக்கைத் தட்டிப் பறித்து அடுத்த கணமே மேலும் ஒரு ட்ரை வைக்கப்படடது.

இவ்வாறு கண்டி அணி பெற்ற 7 ட்ரைகளில் 3 ற்கு மேலதிகப் புள்ளிகள் பெறப்பட்டன. இதனால் கண்டி அணி 3 கோல் 4 ட்ரை 1 பெனல்டி மூலம் 44 புள்ளிகளைப் பெற்றது.

சீ.ஆர்.என்ட்.எப்.சி. அணியால் எந்த ஒரு புள்ளியும் பெற முடியாத நிலையில் போட்டி முடிவுற்றது.

2014ஆம் ஆண்டு றகர் பருவத்தில் முதற்தர அணியொன்று புள்ளி எதுவும் பெறாது தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :