அரசாங்கமும், ஜனாதிபதியும் நிபந்தனையை மதிக்காத வரையில் பேச்சு­வார்த்தை­க்கு இடமில்லை



மிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களையும், சர்வதேச நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவேற்றி­யிருந்தால் நாம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வந்திருப்போம். அரசாங்கமும், ஜனாதிபதியும் எமது நிபந்தனைகளை மதிக்காத வரையில் பேச்சு­வார்த்தை­களுக்கு இடமில்லை என தமிழ் தேசியக் கூட்ட­மைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத எமக்கான கோரிக்கைகளை இனிமேலும் அரசாங்கம பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க முடியாது. சர்வதேசத்தின் உதவியே எமக்கான வழிமுறையெனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வட மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்று­க்கொள்வ­தற்காக அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு பதில் தெரிவிக்கை­யிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் வார்த்தைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. 2011ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. அதன்போது எம்மால் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி அதற்கான எவ்வித கருத்துக்களையும் அவர் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

அதன் பின்னரும் நாம் அரசாங்கத்துடனான சில தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் அர­சாங்கம் எமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறை­வேற்றவில்லை. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற தெரிவுக்கு­ழுக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக மங்கள ??????? பாராளுமன்ற அறிக்கை, சந்திரிக்கா குமாரதுங்கவினால் முன்வைக்க­ப்பட்ட மூன்று அறிக்கைகள் மற்றும் சர்வகட்சி குழுவின் அறிக்கைகள் உள்ளிட்ட 5 அடிப்படையிலான ஆவணங்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டது.

எனினும் நாம் முயற்சி செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

யுத்த முடிவின் பின்னர் அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளும் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும், சர்வதேச அமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளும் நியாயமானவையே. இதில் ஒன்றினைக்கூட அரசாங்கம் மதித்தோ அல்லது அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தோ செயற்படாதவிடத்து எம்மாளும் அரசாங்கத்தை நம்பி ஏமாற முடியாது.

நாம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு போவதனால் எவ்வித அர்த்தமும் இல்லை. பெரும்பான்மை மக்களின் அடக்குமுறையின் கீழ் எம்மால் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைகளும் அர்த்தமற்ற ஒன்றாகவே சென்று முடிவடையும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சக்திகளை நம்பியே செயற்படுகின்றது. அரசாங்கத்தினால் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாததையே நாம் சர்வதேசத்திடம் கேட்கின்றோம். இவற்றில் சட்டமுரணான எவையுமோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகள் எவையுமோ இல்லை.

அரசாங்கம் எதைக் கூறினாலும் அரசாங்கமும், ஜனாதிபதியும் உண்மையாக செயற்படும் வரையில் நாம் அரசாங்கத்தினை நம்பத்தயாராக இல்லை. தெரிவுக்குழு விடயத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை.

தமிழ் மக்களையும் இந்நாட்டின் குடிமக்களாக மதித்து நடத்தும் வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகள் தொடரும். வடக்கின் விடுதலையினை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :