பாரிய ஊழல் மோசடி : அகில இலங்கை உலமா கவுன்சிலின் அவசியம் உணரப்பட்டது - முபாறக்

கில இலங்கை உலமா சபையின் அம்பாரை மாவட்ட நிர்வாக சபை தெரிவில் பாரிய ஊழல் மோசடி நடைபெற்றதான உலமாக்களின் குற்றச்சாட்டின் மூலம் கிழக்கை மையமாகக்கொண்ட அகில இலங்கை உலமா கவுன்சிலின் அவசியம் உணரப்பட்டுள்ளது என கல்முனை உலமா சபையின் முன்னாள் உப தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

பொதுவாக அ. இ. உலமா சபையின் மாவட்ட கிளைகள் தெரிவின் போது அந்தந்த மாவட்டத்தின் உலமா சபையின் அங்கத்துவம் பெற்ற அனைவரையும் கூட்டியே இத்தேர்வு நடப்பதே இது வரை வழமையாக இருந்து வந்தது.

ஆனால் இந்த வருடத்துக்கான தெரிவின் போது இந்த நடைமுறையை பின்பற்றாது இரகசியமாக தெரிவு செய்வது போன்றே இருந்தது. இது சம்பந்தமான கூட்டம் நடை பெறுமுன் கிளைகள் நடத்திய வருடாந்த கூட்டங்களின் போது தேசிய தலைவருக்கு பிடித்த சிலர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் கிளைகளின் உபதலைவர் போன்ற பதவியில் இருந்த போதும் அவர்கள் வேண்டுமென்றெ அழைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே கல்முனை உலமா சபையும் கள்ளத்தனமாக நடந்து கொண்டுள்ளது.

கல்முனை போன்றே அம்பாரை மாவட்ட ஏனைய பல கிளை உலமா சபைகளும் இவ்வாறே கள்ளத்தனமாக நடந்து கொண்டுள்ளன. அத்துடன் ஒரு சிலரை மட்டும் அழைத்து நடந்த அம்பாரை மாவட்ட உலமாக்களுக்கான பொதுக்கூட்டத்தில் அதுவும் சுமார் ஐம்பது பேர் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தில் கிளைகளின் தலைவர், உபதலைவர்கள், செயலாளர், பொருளாளர் மட்டுமே கலந்து கொண்டு அம்பாரை மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தலைவர் ரிஸ்வி முப்தியால் கூறப்பட்டது. 

இதன் மூலம் தமக்கான நிர்வாகத்தை தெரியும் செய்யும் உரிமை அம்மாவட்ட உலமாக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளமை உலமாக்கள் வரலாற்றில் பாரிய வடுவாகும்.

அ. இ. உலமமா சபை ஏன் இவ்வாறான திருகுதாளங்களை மேற்கொள்கிறது என உலமாக்கள் வினா எழுப்புகின்றனர். ஒரு சிலரின் தனிப்பட்ட சுக போகத்துக்காக உலமா சபை தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு உலமாக்களின் பலம் விற்கப்படுகிறதா எனவும் கேட்கப்படுகிறது.

ஆகவே மோசடியான வழியில் தெரிவு செய்யப்பட்ட அம்பாரை மாவட்ட கிளைகளின் நிர்வாகங்கள் மற்றும் அம்பாரை மாவட்ட உலமா சபையின் நிர்வாகமும் உடனடியாக கலைக்கப்பட்டு, அனைவரும் அழைக்கப்பட்டு நீதியான தெரிவு நடத்தப்பட வேண்டும். அல்லது அம்பாரை மாவட்ட உலமாக்கள் ஒன்றிணைந்து அகில இலங்கை உலமா கவுன்சிலை பலப்படுத்துவதே இதற்கான மாற்று வழியாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :