ஏ.எம். தாஹாநழீம்-
சம்மாந்துறையின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 2014.01.08 ஆந் திகதி காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ULM. ஹாசிம் தலைமை தாங்கினார். இதில் பிரதம அதிதியாக மாகாண சுகாதார அமைச்சர் MIM. மன்சூர் அவர்களும் விசேட அதிதிகளக மாகாண சபை உறுப்பினர் MLA. அமீர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் AMM. நௌஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்பித்துக்கொண்டிருக்கும் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு தர ரீதியான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மேம்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆசிரியர்களுக்கிடையில் சிறந்த விடயஙகள் (Best Practice) பரிமாறப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிதிகளும் சம்மாந்துறை வலயத்தின் கல்வி மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் சிறந்த விடயங்களை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவிகளால் வாசிக்கப்பட்டதுடன் இவ்வலயத்திற்கான சிறந்த பாடசாலைக்கான விடயமாக முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் சுகாதாரக் கழக மேம்பாட்டு நடவடிக்கை பற்றிய (Best Practice) அங்கு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment