யாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும், கொழும்பு மாவட்டத்தில் 39 வீதமானவர்களும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment