வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காகித ஆலை வளவிற்குள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டமானது தங்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சம்பளக் கொடுப்பனவானது கடந்த 2 மாதங்களாக இது வரை வழங்கப்படவில்லையென்று தெரிவித்து தொடர்ந்து 22 நாட்;களாக ஆலை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடாமல் தங்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப் பெற வேண்டுமென கோரி கோஷங்கள் எழுப்பியும் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறும் ஆலை முகாமைக்கு கண்டனம் தெரிவித்து இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காகித ஆலை நிர்வாகமே 75ற்க்கு மேற்பட்ட இரும்பு லொறிகள் விற்ற பணம் எங்கே? இரண்டு மாதச் சம்பளப் பணத்தை தராமல் ஏமாற்றும் முகாமையே வெளியேறு? ஏழை ஊழியர்களின் இரத்தம் உறுஞ்சும் தலைமை அதிகாரியே உன்னை வெளியேற்றுவோம். தொழிலாளர்களுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகாமையே இது உனக்குத் தேவையா? எமது பிள்ளைகளின் பசி, பட்டினியோடு தவிசாளர் சுகபோக வாழ்க்கை. என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சம்பவத்தை கேள்வியுற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவ்விடத்திற்கு சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவரிடம் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
அதில் ஒவ்வொரு மாதச் சம்பளப்பணமும் அந்தந்த மாதம் 25ந் திகதி கிடைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த மாத இறுதியில் அதாவது 30ந் திகதி தவறாமல் தரப்படவேண்டும்.
2013 டிசம்பர் மாத மிகுதிச் சம்பளம் 2014 ஜனவரி மாதத்தில் தரப்படவேண்டும். எங்களது சம்பளத்தில் களித்து வங்கிக்கு அனுப்பும் எங்களது கடன் தொகைக்கான மாதாந்த செலுத்துகைப் பணம் அந்த மாதத்திலே அனுப்பப்பட வேண்டும். தற்போது எங்களது சம்பளத்தில் களித்து எடுக்கப்பட்ட வங்கிக்கான நிலுவை முழுவதும் உடனடியாக செலுத்தப்படல் வேண்டும்.
எங்களது சம்பளத்தில் களித்து எடுக்கப்படும் நுPகுஇ நுவுகு இற்க்கான பணத்தையும் நிறுவனத்தால் வழங்கப்படும் பணத்தொகையும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்தப்படல் வேண்டும். (நுPகு பெப்ரவரி 2012 தொடக்கம் நுவுகு ஜனவரி 2013 தொடக்கம் இன்று வரை) இதுவரை காலமும் செலுத்தப்படாமல் நிலுவையாகவுள்ள நுPகுஇ நுவுகு முழுவதும் உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.
2008ம் ஆண்டு சுயவிருப்பில் சென்று நஷ்ட ஈட்டுத்தொகை தரப்படாமல் மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டவர்களுக்கான 50வீத சம்பளம் முழுமையாக தரப்படல் வேண்டும். மேலும் அவர்களுக்கான வருடாந்த சம்பள ஏற்றம் சிறு தொகையே தரப்பட்டது. அதன் மிகுதி முழுவதும் கிடைக்க வேண்டும்.
தற்போது செயல்படும் உமியிலான செயற்பாட்டால் தொழிற்சாலை இயந்திரங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்க்கு முதலில் நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படல் வேண்டும்.
இவை அனைத்தும் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்த முடியாத பட்சத்தில் கட்டாய விருப்ப்pல் (உசள) எல்லோருக்கும் தகுந்த நஷ்டத் தொகை கொடுக்கப்பட வேண்டும். அது முடியாது என்றால் சுய விருப்பில் செல்பவர்களுக்கு இடமளித்து அவர்களுக்கு எம்பிலிப்பிட்டிய ஆலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டத் தொகைக்கு மேலாக வழங்கி அனுப்பப்பட வேண்டும்.
என்பன போன்ற கோரிக்கை அடங்கிய மகஜர் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment