யுவன் மதம் மாறிய நிலையில் அடுத்து சிம்புவின் குடும்பமும் மதம் மாறியது


ளையராஜாவின் இளைய மகன் யுவன் மதம் மாறியது சினிமா உலகில் பல எதிர்வலைகளையும் , அதிகமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இன்னும் பேச்சு ஓயாமல் இருக்கும் நிலையில், அடுத்து இப்போது இன்னுமொரு திரையுலக பிரபல குடும்பமே மதம் மாறிய செய்தி அம்பலத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே சிம்பு உட்பட டி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தும், விடயம் வெளியில் தெரியாமல் ரொம்ப கப்சிப்பாக பேணப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண நிகழ்வினால் மத மாற்ற சம்பவம் வெளிக்கிளம்பியுள்ளது.

இந்த மத மாற்ற முடிவை எடுத்தவர் டி.ஆரின் மனைவி உஷா!
ஆரம்பத்தில் பிள்ளைகள் மூவருக்கும் உடன்பாடில்லா விட்டாலும் அன்னையின் வேண்டுகோளுக்கு தலை வணங்கியவர்களாக கிறிஸ்தவ மதத்தை தழுவி இருக்கிறார்கள் மொத்தக் குடும்பமும்.

அப்போது தன் மத மாற்றம் தொடர்பில் நெருக்கமான வட்டாரத்திடம் தன மனக் குமுறலை வெளிப்படுத்தி ஆதங்கப்பட்ட சிம்பு, இப்போது சந்தோசமாக காணப்படுகிறார் என்பது புதுச் செய்தி. 

காரணம், நயனோடான காதல் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், நயன்தாராவும் பிறப்பில் கிறிஸ்தவராகவும் டயானா குரியன் எனும் இயற்பெயருக்கும் சொந்தமானவராகவும் இருக்கிறார்.

இப்பொழுது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும். சிம்பு எதற்க்காக சந்தோசத்தில் திளைத்திருக்கிறார் என்பது! 

-இனி எந்த பிரச்சினையும் சிம்பு நயன் வாழ்க்கையில் வராமல் இருந்தால் சரி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :