பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு



பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக மார்க்கஸ் பெர்ண்டோ மண்டபவத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலே குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் கடவத்தை, மல்வானை பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் என்ற இளைஞனின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகின்றனர்.

இம்மாணவன் 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வந்ததாகவும் பின்னர் புதிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் பகிடிவதைக்கு பயந்து பல்கலைக்கழகத்திற்கு செல்வதை நிறுத்திக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கடவத்தை, மல்வானையிலிருந்து குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும் இதுதொடர்பாக இளைஞனின் சிறிய தந்தை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சில தினங்களின் பின்னர் சகோதரர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது தான் கண்டியில் இருப்பதாக உயிரிழந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

இதன்பின்னர் மீண்டும் சகோதரர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போது மாணவனின் தொலைபேசி செயலிழந்து காணப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் காட்டுப்பகுதியில் தொங்குவதை அவதானித்த சில மாணவர்களும் ஊழியர்களும் பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து சடலத்தை பொலிஸார் மீட்டதுடன் பேராதனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :