விளையாட்டு வீர்ர்களுக்கான நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்



எம்.பைஷல் இஸ்மாயில்-

ம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான போதிய வளங்களும் வசதிகளுமற்ற நிலையில் தனது முயற்சியினால் தங்கப் பதக்கம் வென்று தாய் நாட்டிற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தந்த ஏ.எல்.எம்.அஷ்ரப்பிற்கு தனது வாழ்த்தையும் பாராட்டையும் இந்த இடத்தில் தெரிவிப்பது மிகப்பொருத்தம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை காபானா ஹோட்டல் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு விரர்களுக்கான மிக முக்கிய சந்திப்பின்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நமது தாய்நாட்டையும், அம்பாறை மாவட்டத்தையும், குறிப்பாக அவரை பிரதிநிதிப்படுத்தும் பொத்துவில் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துக்கொடுத்த அஷ்ரப் போன்ற விளையாட்டு வீரர்கள் முழு கிழக்கு மாகாணத்திலும் உருவாகவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நான் பிறந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மட்டுமல்ல அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள 26 விளையாட்டுக் கழகங்களிலும் இருந்து சுமார் ஒரு கழகத்தில் ஒரு வீர்ர வீதம்படி எதிர்காலத்தில் 26 வீரர்களை நாம் உறுவாக்க முயற்சிக்கவேண்டும். அதற்காக நாம் அணைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும்.

இந்தியாவின் லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் அஞ்சல் ஓட்டக் குழுவில் பங்குபற்றி இன்று தங்கப் பதக்கத்தை வென்றுவந்த ஏ.எல்.எம்.அஷ்ரஃப் பொத்துவில் மண்ணுக்கு மட்டுமல்லாது அங்குள்ள அரசில்வாதிகளையும், அம்பாறை மாவட்ட அரசில்வாதிகளையும் தனது விளையாட்டின் மூலம் விழிப்படையச் செய்து அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் விளையாட்டுத்துறைக்கு சகல உதவிகளையும் செய்ய முன்வர வைத்துள்ளார்.

இன்று தேசிய ரீதியில் அஷ்ரஃப் தனது திறமையை வெளிக்காட்டி முழு பொத்துவில் பிரதேச மக்களுக்கும் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இதை பொத்துவில் மக்களும் சகல விளையாட்டுக் கழக வீரர்களும் இதை வரலாற்றுச் சாதணையாக கருதி அந்த நன்நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும்.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பாரிய முன்னெற்றத்தை கண்டுவரும் இன்றைய விளையாட்டு வீரர்கள் பல தேவைகள் உள்ளவர்களாகவும், போதியளவு வளங்கள் அற்றவர்களாகவும் இல்லாத நிலையிலேயே இன்று தேசிய ரீதியில் பல புகழ்களை சேர்த்து வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒலுவில் ஆர்.எம்.றஜாஸ் கான் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். அவரைப்போன்று அட்டாளைச்சேனை எம்.ஐ.எம்.மிப்ரான் தேசிய ரீதியில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் பிரகாசித்து வருகின்றார். இந்த மூன்று மெய்வல்லுனர் வீரர்களும் சமகாலத்தில் தேசிய ரீதியில் சாதனை வீரர்களாக மிளிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் துறையில் நிந்தவூரைச் சேர்ந்த வீரர் நிக்ஸி அஹமட் சகலதுறை கிரிக்கெட் வீரராக அகில இலங்கை ரீதியாக முதன்மையான வீரராகவும் பிரகாசித்து வருகின்றார்.

இதன் மூலம் ஏனையவர்களும் இவ்வாறான தேசிய மட்ட, சர்வதேச மட்ட போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இன்று அஷ்ரஃப் அம்பாறை மாவட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே எதிர்காலத்தில் எமது பிரதேச விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு அனைத்து விளையாட்டு வீரர்களும் சகல முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அஷ்ரஃபின் தாய் தந்தையர் தனது பிள்ளை விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் காட்டியிருந்தபோதும் அவர்கள் அதற்கு தடை விதிக்காமல் தனது பிள்ளை விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று என்ணி அஷ்ரஃபின் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவமளித்துள்ளதால் தான் அவர் இந்தளவுக்கு தனது சாதணையை நிலை நாட்டுவதற்கும் சாதிப்பதற்கும் உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோர்களையும் இந்த இடத்தில் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள், விளையாட்டுத்துறைசார் உத்தியோகத்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள் அவர்களையும் நான் இந்த இடத்தில் பாராட்டுகின்றேன். இன்று பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரஃப் போன்று எமது அம்பாரை மாவட்டத்தில் குறிப்பாக அட்டாளைச்சேனை பல வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாக வேண்டும்.

எதிர்காலத்தில் எமது பிரதேசத்தை தேசிய ரீதியில் பிரபல்யமிக்கதாக மிளிரவைக்க நான் எப்போதும் முன் நிற்பேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :