சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் புதிய பதிவாளராக மருதமுனை எம்.எப்.ஹிபதுல் கரீம் பதவி ஏற்கிறார்.

பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாக பிரதிப் பதிவாளராகக் கடமையாற்றி வரும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான மருதமுனையைச் சேர்ந்த எம்.எப்.ஹிபத்துல்; கரீம் எதிர்வரும் 2014-02-17ம் திகதி திங்கள் கிழமை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் புதிய பதிவாளராப் பதவி ஏற்கவுள்ளார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் எஸ்.எம்.எம்.பழீல,; மர்ஹூமா பாத்துமுத்து தம்பதியின் புதல்வராக 1967-05-03ம் திகதி மருதமுனையில் பிறந்தார்;. மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் 1ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றார்.

1987ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்று விஞ்ஞான மானி; பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார். பின்னர் 1994ம் ஆண்டு தொடக்கம் 1997ம் ஆண்டு வரை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்று விஞ்ஞான முதுமானிப் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார்.

பின்னர் 2004ம் ஆண்டு பட்டப்பின் முகாமைத்துவ டிப்ளோமா கற்கையை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில்; பூர்த்தி செய்தார். பின்னர் கணணி விஞ்ஞான டிப்ளோமா கற்கையை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2004ல் பூர்த்தி செய்தார்.

1997-02-03ம் திகதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பதிவாளராக கடமையாற்றினார். அதன் பின்னர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் 1999-04-01ம் திகதி உதவிப்; பதிவாளராக நிரந்தர நியமனம் பெற்றார்.

அதன் பின்னர் 1999-09-01ம் திகதி இடமாற்றம் பெற்று தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றி 2005-01-03ம் திகதி சிரேஸ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2005-09-01ம் திகதி தொடக்கம் 2009-01-31ம் திகதி வரை பதில் பதிவாளராகவும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலேயே கடமையாற்றினார்.

2009-02-01 தொடக்கம் 2012-04-31 வரை தனது பட்ட முகாமைத்துவ(ஆடீயு) படிப்பைப் பூர்த்தி செய்வதற்கா விடுமுறை பெற்று பின்னர் 2013ல் ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில்(Pஐஆ) வியாபார நிருவாக முதுமானி பட்டத்தை நிறைவு செய்தார்.

2013-01-01ம் திகதி முதல் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகதின் பிரதிப் பதிவாளராகக் கடமையாற்றிவரும் நிலையிலேயே சப்ரகமுவ பல்கலைக்கழக பேரவையினால்(ஊழுருNஊஐடு)பதிவாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதமுனை பிரதேச கல்வி மற்றும் விளையாட்டு அபிவிருத்திக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் இவர் எல்லோரோடும் மிகவும் அன்பாகப் பழகுபவர். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அக்கறைகாட்டுபவர். கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்ட பல கருத்தரங்குகளுக்கு கனடா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று பங்குபற்றியவர். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :