பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் வாசிம் அக்ரமிற்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும், டெஸ்ட் அணித் தலைவருமான வாசிம் அக்ரம் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்தின் அருகில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்துக் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டார்.

அந்த இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 60 கி.மீ வேகத்தை மீறி அக்ரம் 78 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தது போக்குவரத்துக் காவலரால் சுட்டிக்காட்டப்பட்டு அபராதத் தொகையாக 500ரூபாயும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் வாசிம் அக்ரம் அபராதத் தொகையை செலுத்தியதாக போக்குவரத்து அதிகாரி குறிப்பிட்டார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அந்நாட்டின் மற்றொரு கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் கைது செய்யப்பட்ட சில நாட்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விதிகளை மீறியது, போக்குவரத்துக் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் வாக்குவாதத்தின்போது போக்குவரத்து அதிகாரியின் சட்டையைப் பிடித்து கிழித்தது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரணையை மேற்கொண்டுள்ள அக்மல் தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :