காதலர் தினம்:! சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!


ஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்).ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.

அவனிடமிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு தனது புறத்திலிருந்து நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை கொடுத்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்துள்ளான் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் குருடர்களாக ஷைத்தானின் மாயவலையில் சிக்கிக்கொள்கிறோம் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (அல்குர்ஆன் 4: 120)

ஷைத்தானுக்கு வாசல் திறந்துவிடும் பெற்றோர்!
இங்கு நல்ல பெற்றோரை பற்றி குறிப்பிடவில்லை நல்ல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கிறார்கள் ஆனால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் சில அசிங்கங்களை செய்கின்றனர்.
தந்தை குடிகாரராக இருந்தால் அவருடைய மகன் தந்தையே இந்த கீழ்தனமான காரியத்தை செய்கிறார் நாம் செய்தால் என்ன? என்று சிந்திக்கிறான்! தாய் சினிமா திரையரங்குகள் செல்பவளாக இருக்கிறாள் அல்லது தொலைக்காட்சிகளில் ஆபாச நிகழ்ச்சிகளான குரங்காட-குயிலாட டான்ஸ், கூத்துக்கள், நாடகங்கள் ஆகியன ரசிப்பவளாக இருந்தால் அவளுடைய மகளோ பெற்ற தாயின் நிலையே இவ்வாறு உள்ளது நாம் செய்தால் என்ன என்று நினைக்கிறாள். சிந்தித்துப் பாருங்கள் பெற்றோர் ஒழுங்காக குர்ஆன்-ஹதீஸ்களை படித்துக் கொண்டும் அதை தம் பிள்ளைகளுக்கு போதித்துக் கொண்டும் தொழுகையை முறையாக பேணிக் கொண்டும், நாகரீகமான முறையில் வாழ்ந்து கொண்டும் இருந்தால் இந்த அவலநிலை தொடருமா?

ஷைத்தானை சுதந்திரமாக அறையில் தங்கவைக்கும் பெற்றோர்.
சில வீடுகளில் குழந்தைகளுக்கு தனி அறையும், முதியவர்களுக்கு தனி அறைகளும், பெற்றோருக்கு தனி அறையும் இருக்கும் இவ்வாறு தனித்தனியாக அறைகள் இருப்பது தவறல்ல ஆனால் அந்த ஒவ்வொரு அறைகளிலும் ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து அதில் கேபிள் இணைப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர் ஏன் என்று கேட்டால் என் பிள்ளைகள் திரையரங்குக்குச் செல்வதில்லை எனவேதான் நாம் அவர்கள் உள்ளத்தை நோகடிக்காமல் இருப்பதற்காக தொலைக்காட்சியை கொடுக்கிறோம் என்கின்றனர். அவர்களை நோக்கி தனித்தனி தொலைக்காட்சிகளை கொடுப்பதால் பணம் விரயமாகிறதே என்று கூறினால் அவர்களோ நாம் இலவச சக்தி டி.வி. கொடுக்கிறோம் இதில் என்ன வீண் விரயம் இருக்கிறது என்று பதில் கூறுகின்றனர். இரவில் பெற்றோர் தங்கள் அறைகளுக்குச் சென்று தாழிட்டுக் கொள்கிறார்கள் மற்றொருபுறம் பிள்ளைகளும் தங்கள் தனி அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்கிறார்கள். பெற்றோர் தம் பிள்ளைகள் உறங்குகிறார்கள் என்றுதான் எண்ணுகிறார்கள் ஆனால் அதே வேளையில் ஷைத்தானோ பிள்ளைகளின் உள்ளத்தில் தொலைக்காட்சி ஆபாசத்தை பார்க்க தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான். இதனால் இளம் வயதில் ஆசைகளை தணிக்க தன் துணையை தேடி இளம்பிள்ளைகள் அலைகின்றனர்.

ஷைத்தானின் செயல்களை சுதந்திரமாக ரசிக்கும் வயோதிகர்கள்!
ஒவ்வொரு வீட்டிலும் சில வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிக்கள் இருக்கின்றர் அவர்களில் தொழுகையைப் பேணும் நல்லவர்களும் உள்ளனர் ஆனால் பெரும்பாலான வயதுமுதிர்ந்தவர்கள் ஷைத்தானின் செயல்களை தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஆண் வயோதிகர்களுக்கு ஆங்கிலச் சேனல்களை பார்ப்பதில் அலாதி பிரியம். இது தவறு என்று கூறினால் நம் காலத்தில் இந்த மாயபெட்டி இல்லை என்ன செய்வது என்று பதில் கூறுவார்கள், தட்டிக்கேட்டால் எங்களை திட்டுகிறார்கள் என்று மற்றவர்களிடம் அழுதுகாட்டி பரிதாப கரமான சூழலை ஏற்படுத்திக் கொள்வார்கள். உங்களின் செயல்களால் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளதே என்று விளக்கிக்கூறினால் நம் காலத்தில் அதையெல்லாம் விடு! இந்த காலத்து குழந்தைகளாவது சுதந்திரமாக இருக்கட்டுமே! வெளியே சென்று சீரழிவதைவிட வீட்டில் இருந்து பார்ப்பதால் தவறுகிடையாதே என்று இளைஞர்களுக்கு வக்காலத்து வாங்குவார்கள்! செல்போன் கூட வாங்கித்தருவார்கள்!

கேடுகெட்ட உடன்பிறப்புகள்.
வீட்டில் ஒரு சகோதரன் இருப்பான் அவன் தனது தங்கையை வெளியே செல்லக்கூடாது என்று மிரட்டி வருவான் ஆனால் இவன் முச்சந்தியில் நின்று இளம்பெண்களுடன் சிரித்து கொழஞ்சிப் பேசுவான் இதை தங்கை அறிந்து கொண்டால் உடனே தன் தவறு வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து அன்றுமுதல் தங்கையை அதட்டமாட்டான். (இந்த உடன்பிறப்பு யோக்கியவான்??) உடன்பிறந்த சகோதரரின் நிலையை பயன்படுத்திக் கொண்டு தங்கையும் ஆண் துணையைத் தேடி தவறான வழிக்கு சென்று விடுகிறாள் அண்ணன் கண்டும் காணாமல் இருந்து விடுகிறான்! ஒரு வீட்டில் இரு சகோதரிகள் இருந்து அவர்களில் ஒருத்தி காதலனுடன் உல்லாசமாக சுற்றித்திரிவதை இளைய சகோதரி கண்டுவிட்டால் இந்த செயலை பெற்றோரிடம் கூறாமல் மூத்த சகோதரியை தனியாக அழைத்து மிரட்ட ஆரம்பிக்கிறாள் பிறகு இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது காதலை மூத்த சகோதரியிடம் வெளிப்படுத்தி தன் மீதும் அனுதாபத்தை தேடிக்கொள்கிறாள்! இப்படிப்பட்ட சகோதரிகள் சுத்தமானவர்களா? இறுதியில் ஏமாற்றமடைவது பெற்றோர் தானே!

படித்து பட்டம் வாங்கி பறக்க விடும் குடும்ப கவுரவம்!
நமது குழந்தைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று பெற்றோர் பெருமையாக பேசிக்கொள்வார்கள் ஆனால் அவர்களோ அந்த கல்லூரியில் பயிலும் சக தோழர், தோழியர்களுடன் காதல், கத்தரிக்காய் என்று உல்லாசமாக பேசி உலகே எதிர்த்து வந்தாலும் நான் உனக்குத் துணை நிற்கிறேன் நீ கலங்காதே அன்பே! என்று சினிமா டயலாக் பேசிக் கொள்வார்கள். இதிலும் ஆசிரியர்களோ நடத்துவது ரோமியோ ஜுலியட் காதல் பாடம் தான்! படிப்பதோ பட்டம், பறக்க விடுவதோ குடும்ப கவுரவத்தை! என் மகன் மற்றும் மகள் கெட்டிக்காரன்! நமது குழந்தைகள் பிறரைவிட கெட்டிக்காரர்கள் என்று பெற்றோர் பெருமையாக ஊர் முழுவதும் தண்டோரா அடிப்பார்கள் ஆனால் ஒருசில இளம் மகனோ, மகளோ என்ன செய்கிறார்கள் தெரியுமா? தந்தை கூறுவது உண்மைதான் என்று விளங்கிக் கொண்டு மேஜர் சர்டிபிகட் வாங்கிக்கொண்டு காவல்நிலையத்தில் ஜோடியாக நின்றுவிடுகிறார்கள். இன்று ஒருசில இளம் சந்ததியினரின் கெட்டிக்காரத்தனம் காவல்நிலையத்திலும், மேஜர் சர்டிபிகட் வாங்கும் திறமையின் மூலமும் தானே வெளிப்படுகிறது!

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறிக்கொண்டே இளம் பெண்களை கல்லூரியில் சேர்த்து படிக்கவையுங்கள் என்று தமிழ் சமூகத்தார் வியாக்கியானங்களை அளித்தனர் அதன் பிரதிபலனாக ஒரு சில துணிச்சலுடைய பெண்கள் தனியாக வீட்டை விட்டு கல்லூரிக்குச் சென்று பட்டம் படித்து கற்பை இழந்து நிற்கிறார்கள். காவல்துறையும் இவர்களுக்கு கோல்டு மெடல் கொடுப்பது போன்று காதல்திருமணம் செய்து வைக்கிறார்கள்! இன்றெல்லாம் ஒவ்வொரு காவல் நிலையங்களும் 100-வது காதல் ஜோடி தஞ்சம் என சேஞ்சுரி போடுகிறார்கள். இன்று காவல்நிலைய காதல் திருமணங்கள் வெகு விமரிசையாக நியுஸ் சேனல்களிலும் போஸ்டர்களிலும், நாளிதழ்களிலும் வெளிவரும் அளவுக்கு நிலைமை சீரழிந்துவிட்டது. இது வேதனையின் உச்ச கட்டம்!

இளம் மங்கையர்களே! இளைஞர்களே கீழ்கண்டவற்றை சிந்தியுங்கள்!
உங்களில் சிலர் காதல் வலையில் சிக்கி பெற்றோரை துன்புறுத்துகிறீர்கள்! சமுதாயத்தை தலைகுனிய வைக்கிறீர்கள்! இறுதியாக காதலனிடம் ஏமாந்து கற்பை இழக்கிறீர்கள்! உடல் சுகத்தை அனுபவித்தவுடன் ச்சீ! இதற்காகத்தான் ஓடிப்போனாமா? என்று சமுதாயத்தின் முன் சிறுமைப்பட்டு நிற்கிறீர்களே இது நியாயமா? கைப்பிடித்தவன் காணாமல் போனால் கண்கலங்கி பிழைக்க வழி இல்லாமல் நிற்கிறீர்களே இந்த நிலை தேவையா? பெற்றோரின் அறிவுரையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் கண்ணியமான வாழ்க்கைத் துணை கிடைத்திருக்குமே? 

சாகும் வரை நிம்மதியாக கற்புள்ள பெண் என்று போற்றப்படுவீர்களே இந்த இழிவு உங்களுக்குத் தேவையா? உங்களை காதல் வலையில் சிக்கவைத்து இழுத்துக் கொண்டு ஓடினானே அந்த கயவன் நாளை வேறு பெண்ணுடன் இந்த மாய வலையை விரித்து அவளை இழுத்துக்கொண்டு ஓடி உங்களை அனாதையாக விடுவானே இந்த நிலை உங்களுக்குத் தேவையா? இன்றைய இளைஞர்களே, இளைஞிகளே எதை நீங்கள் காதல், காதல் என்று கூறுகிறீர்களோ அது உண்மையில் காதல் இல்லை அது உடல் சுகத்தை தணிக்கும் காம இச்சையே தவிர வேறு இல்லை! இதுதான் இன்றைய காதலுக்கான இலக்கணம்!

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன் 2:257)

காந்தியடிகள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களெல்லாம் கஷ்டப்பட்டு தேடித்தந்த சுதந்திரத்தை இந்த சைத்தானியத் காதல் அழித்து வருகிறது இன்று நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது ஆனால் சினிமாவிற்கும், ஆபாச தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், செல்போன்களுக்கும் இளைய தலைமுறையினரை அடிமையாக்கி சைத்தானிய காதல்வலையில் மீன்களைப் போன்று சிக்கி அடிமைகளாக திக்கற்றவர்களாக அலைய வைத்துள்ளது! குர்ஆன் ஹதீஸ்களை அறிந்துக்கொண்ட எந்த ஆணோ, பெண்ணோ இது போன்ற பாவத்தில் ஈடுபடுகிறார்களா? சிந்தித்துப் பாருங்கள் எங்கெல்லாம் திருமறையை உணரப்படவில்லையோ! எங்கெல்லாம் நபிகளாரின் வாழ்க்கையை அறியப்படவில்லையோ அங்கெல்லாம் இந்த இழிவுதான் நிகழ்ந்துக்கொண்டு உள்ளது ஆம் இஸ்லாத்தின் தூய்மையை புறக்கணிப்பவர்களிடம் தான் இந்த ஷைத்தான் தலைவிரித்து ஆடுகிறான்!

அனைத்து சமுதாய மக்களும் ஓர் இனிய அறிவுரை.
காதலர் தினம் என்னும் காம இச்சையர்கள் தினத்தில் அதாவது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தினத்தன்று (இந்த தினம் மிக அருகாமையில் வர இருக்கின்றது) உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை: அன்றைய தினம் உங்கள் பெண்பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்! அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரியே! அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்! ஆபாச காதல் எஸ்.எம்.எஸ்கள் நிறைய வரலாம்! அன்றைய தினம் ஆண்களில் இளைஞர்களுக்கு அதிகமான பணம் கொடுக்காதீர்கள்!

 குடித்து சீர்கெட வாய்ப்பு உள்ளது! அன்றைய தினம் இளைஞர்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்காதீர்கள்! பெண்களுடன் சுற்ற வழி பிறக்கலாம்! அன்றைய தினம் அவர்களுக்கு நீங்களே பாதுகாவலாக இருக்கவும்! காவல்துறையை நம்பி மோசம் போகாதீர்கள்! காதலர் தினம் என்னும் காம இச்சையர்கள் தினத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளை நோட்டமிடவும், அவர்கள் தவறான வழியில் சென்றால் இஸ்லாம் கூறும் அடிப்படையில் கண்டிக்கவும்! குர்ஆன் ஹதீஸ்களை நீங்களும் கற்று உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத்தரவும்! PEACE TV மற்றும் இஸ்லாமிய தாவா நிகழ்ச்சிகளை அதிகமதிகம் பார்க்கவும்!

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன்: 4: 1)
நன்றி: தூயவழி

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து நம் சந்ததியினரை காப்பாற்றவும், காமக் காதலர் தினத்தை எதிர்த்து ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக ஓரணியில் நின்று போராட மாட்டார்களா? இந்த நாள் என்று வரும்?அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :