மட்டக்களப்பு மற்றும் வவுனியா பொது வைத்தியசாலைகளில் பணிபுரியும் சிற்றூழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கைக் குடியரசு சௌக்கிய சிற்றூழியர் சங்கத்தினரால் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், தமதுகோரிக்கைகள் தொடர்பான கோசங்களையும் எழுப்பினர்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாத்தத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் சிற்றூழியர்களும் வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் வவுனியா பொது வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதனால் வைத்தியசாலைகளின்ன் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வார்ப்பாட்டமானது, கடந்த 2014.01.16 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோரப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்க தரப்பினால் 2014.02.10 ஆம் திகதிக்கு முன் தீர்வு எதிர்பார்க்கப்பட்டதாகவும் அது இன்னமும் வழங்கப்படாமையால் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment