யுத்தம் நிறைவடைந்தவுடன் அரசாங்கம் முறையான திட்டங்களை வகுத்து வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைத்து அங்கு வாழ்ந்த மக்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கண்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இலங்கை அரசு முறையாக செயற்படாததே ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த பிரேரணை நிறைவேறினால் இலங்கை பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பாதிக்கப்படுவது இந்நாட்டு மக்களே என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment