காரைதீவு பிரதேச செயலக கிராம பிரிவுகளின் அபிவிருத்தி தொடர்பான முன்னோடிக் கூட்டம் காரைதீவு ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலையில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது.
இதன் போது காரைதீவு பிரதேசத்தில் உள்ள 12 கிராமப்பிரிவுகளிலும் மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள 3 கிராமப்பிரிவுகளிலும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள 3 கிராமப்பிரிவுகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு கிராமப்பிரிவுகளிலும் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்வுள்ள ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பாகவும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகப்பிரிவுகளின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன அவர்களின் பிரத்தியேக இணைப்பாளர் அதிபர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டர்.
இவ் வைபவத்தில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.உதயக்குமார்,ஜௌபர்,உட்பட பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் பிரதி அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர அவர்களின் இணைப்பாளர் என பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment